என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mitchell Johnson"

    • ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக இலங்கை தொடரில் நியமித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது.

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் பேட் கம்மின்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பந்தினை சேதப்படுத்தியதாக இரண்டாண்டு கேப்டனாக செயல்பட தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக இலங்கை தொடரில் நியமித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதில் மீண்டும் கேப்டனாக புத்துயிர்ப்படையும் ஸ்மித்தை பல ரசிகர்கள் அவரது தலைமைப் பண்பை பாராட்டுகிறார்கள். நான் இவர்களுக்கு மத்தியில் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

    கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் இருக்கும் ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது. இது ஒரு பிற்போக்குத்தனமான முடிவாகும். எனது கருத்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் அணியின் நீண்ட கால முன்னேற்றத்தில் தேர்வுக்குழுவினர் தவறிழைத்து விட்டதை நினைத்து வெறுப்படைகிறேன்.

    என்று ஜான்சன் கூறியுள்ளார்.

    ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் மீதான தடையை நீக்கக்கூடாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

    இதுகுறித்து இந்த வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மூவரின் தடைக்காலத்தை குறைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் உள்ளூர் தொடரின் கடைசி ஆட்டத்தில் விளையாட முடியும் என்று கிரிக்கெட் நிருபர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

    அதற்கு முனன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் பதில் ட்வீட் செய்திரந்தார். அதில் ‘‘மூன்று வீரர்கள் தடை பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தண்டனை குறைக்கப்படும் என்ற செய்தி முன்னோக்கிச் சென்றால், பான்கிராப்ட் தண்டைனை குறைக்கப்படும் அளவிற்கு ஸ்மித் மற்றும் வார்னரின் தண்டனை குறைக்கப்படலாம். மூன்று பேரும் அவர்களுடையை தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள். அதை எதிர்த்து முறையீடு செய்யவிலலை. ஆகவே, தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.


    ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இருந்து விலகியுள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மிட்செல் ஜான்சன். கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினார். ஆனால் டி20 லீக் தொடரில் விளையாடி வந்தார்.

    பிக்பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். பிக்பாஷ் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறினார்.



    இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 36 வயதாகும் மிட்செல் ஜான்சன் ஆஸ்திரேலியா அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 239 விக்கெட்டுக்களும், 30 டி20 போட்டியில் 38 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். 73 டெஸ்ட் போட்டியில் மூன்று முறை 10 விக்கெட், 12 முறை ஐந்து விக்கெட்டுக்களுடன் 313 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் பிக் பாஷ் டி20 லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #BigBash
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மிட்செல் ஜான்சன். 37 வயதாகும் இவர் சர்வதேச போட்டியில் இருந்த ஓய்வு பெற்றாலும் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த அணி 2016-17 சீசனில் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.



    இவர் தற்போது பிக் பாஷ் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஆனால், ஐபிஎல் தொடர் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    பிக் பாஷ் டி20 லீக்கில் 19 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    ×