search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvLSG"

    • அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார்.
    • அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

    ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

    இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2-வது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.

    ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் மகன் என்பதால் அவருக்கு அபராதம் விதிப்பார்களா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.

    அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவரின் 3-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பூரன் 6 சிக்சர் விளாசினார். இதனால் பயந்து அர்ஜூன் வெளியேறிவிட்டதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். 

    • 15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது.
    • சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

    11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார்.

    அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார். 

    தொடர்ந்து, மயேர்ஸ் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 8 ரன்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

    தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கவுதமும் சொர்ப்ப ரன்னில் ரன் அவுட் ஆகினர். அடுத்தடுத்து 3 ரன் அவுட் லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. 31 பந்துகளில் 83 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் லக்னோ தொடர்ந்து விளையாடியது.

    நவீன் உல் அக் மற்றும் மோஹ்சின் கான் களமிறங்கினர். இதில், நவீன் உல் அக் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோஹ்சின் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.

    நேற்று பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம்.
    • உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.

    சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வியடைந்ததன் மூலம் லக்னோ அணி 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம் எனவும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இருமுறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இது போதாது.

    தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம். அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம். உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×