search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvRR"

    • போல்ட் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 20 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

    இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    அந்த அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய முதல் ஓவரில் ரோகித் சர்மா, நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 39 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

    இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் ஆர்சிவி-க்கு அடுத்தப்படியாக சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த அணியாக மும்பை திகழ்கிறது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது-

    ஆமாம்... இன்றைய இரவு மிகவும் கடினமானது. நாங்கள் தொடங்க விரும்பியது போல் எங்களுக்கு தொடக்கம் அமையவில்லை. நான் அடித்து விளையாட விரும்பினேன். 150 முதல் 160 ரன்கள் வரை நாங்கள் எடுத்திருந்தால் அது ஒரு நல்ல நிலையாக இருந்திருக்கும்.

    ஆனால் என்னுடைய விக்கெட் அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுத்து இருக்க வேண்டும். நாங்கள் இதுபோன்று ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் எப்போதும் ஒரு பேட்ஸ்மேனுக்கே சாதகமாக இருக்கும் என கூற முடியாது. இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வகையில் அமைந்தது.

    எல்லா விஷயங்களையும் சரியாக செய்யக்கூடியது பற்றியது இது. சில நேரங்களில் அதற்கான முடிவுகள் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும். ஒரு அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமான வகையில் சிறப்பாக விளையாடுதல் மற்றும் அதிகமான தைரியத்தை வெளிப்படுத்துவது எங்களுக்கு அவசியம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

    வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    டாஸ் போட்டியை மாற்றக்கூடியதாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். அனுபவம் வாயந்த போல்ட், பர்கர் எங்களுக்கு உதவினார்கள். போல்ட் 10 முதல் 15 வருடங்கள் விளையாடி கொண்டிருக்கிறார். புதுப்பந்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அவருக்கும் தெரியும்.

    நாங்கள் 4 அல்லது 5 விக்கெட் விழும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்கள் அதைச் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தது. எங்கள் அணியில் தனிப்பட்ட திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் தனித்து நிற்கும் இடத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து, அதைச் செய்து முன்னேறுகிறார்கள்.

    ஆவேஷ் கான் மற்றும் சாஹல் நாங்கள் பவர்பிளேயில் சிறப்பாக செயல்பட்டோம் என்பதை உணர்ந்தார்கள். விக்கெட்டை எதிர்பார்க்காமல் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினார்கள். சாஹல் இந்த ஐபிஎல் தொடரில் தீயாக பந்து வீசுகிறார் என்று நினைக்கிறேன். கடந்த 2-3 வருடங்களாக எங்களுக்கு சிறப்பான வகையில் விளையாடி வருகிறார்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுகளை உடனே இழந்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பராக் பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய பராக் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • மும்பை அணி பீல்டிங் செய்த போது மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் நுழைந்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் தரப்பில் டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து ரோகித் சர்மாவை நோக்கி சென்றார். அப்போது பீல்டிங் சரி செய்து கொண்டிருந்த ரோகித் இதனை சற்றும் எதிர்பாராதால் திடுக்கிட்டார்.

    அதன்பிறகு ரோகித் சர்மாவை கட்டியணைத்து ரசிகர் தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கீப்பர் நின்ற இஷான் கிஷனை கட்டியணைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் சர்மா பயந்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மும்பை:

    மும்பை அணி 6-வது ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பாக பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது.

    அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்தது. இதற்கு மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மும்பை அணி விளையாடிய முதல் போட்டியில் சொந்த மண்ணான அகமதாபாத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், ஐதராபாத் மண்ணிலும் ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனால் சொந்த மண்ணில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.

    இதனால் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினால், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது ஹர்திக் பாண்டியா களமிறங்கும் போதே ரோகித் சர்மா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வர்ணனையாளராக செயல்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரசிகர்களை ஓழுங்காக நடந்து கொள்ளுங்கள் என கண்டித்தார்.

    முதல் முறையாக சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கேகேஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை அணியில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட்டின் அசத்தலான பந்து வீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், நமன் டக் அவுட் ஆகினார். போல்ட் வீசிய 2-வது ஓவரில் ப்ராவிஸ் (0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட், அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் மும்பை அணி 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து கேப்டன் பாண்ட்யாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    சிறப்பாக ஆடிய பாண்ட்யா 34 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சாவ்லா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய திலக் 32 ரன்னிலும் டிம் டேவிட் 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • பவர் பிளேயில் மொத்தம் 3 விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி சார்பாக முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். 4-வது பந்தில் இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை போல்ட் படைத்துள்ளார்.

    போல்ட் 80 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீத்தியுள்ளார். 2-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார். இவர் 116 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
    • மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா 15 முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் ரோகித் டக் அவுட்டில் வெளியேறினார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளனர்.

    • 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் ஐதராபாத்திடம் தோற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே லக்னோ, டெல்லி அணிகளை தோற்கடித்து இந்த சீசனை சூப்பராக தொடங்கி இருக்கிறது. 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்ட நிலையில் பறந்து பறந்து மூன்று கேட்ச்கள் பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். #IPL2018 #RR
    ஐபிஎல் தொடரின் 47-வது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மிக்க சந்தோசத்துடன் பந்து வீச்சு தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்து வீசினாலும், பீல்டர்கள் அடுத்தடுத்து கேட்ச்களை நழுவ விட்டனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் அப்செட் ஆனது.



    அதுவும் தொடக்க வீரர்கள் சூர்ய குமார் யாதவ், லெவிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் 200 ரன்களுக்கு மேல் குவித்து விடுமோ என்று அந்த அணி அஞ்சியது. ஆனால், சஞ்சு சாம்சன் அபாரமாக பீல்டிங் செய்தார். மூன்று கேட்ச்களை பிரமாண்டமாக பிடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தடைபோட்டார்.



    2-வது ஓவரை தவால் குல்கர்னி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை மிட்ஆன் திசையில் அடித்தார். பந்து மிட்ஆன் பீல்டர் கவுதமை நோக்கிச் சென்றது. அவருக்கு சற்று முன் பிட்ச் ஆகிய பந்தை பிடிக்க தவறினார். பந்தை நோக்கி கையை கொண்டு சென்ற போதிலும், கைகளுக்கு இடையில் பந்து சென்று தரையை தொட்டது. இதனால் 9 ரன்னில் இருந்து தப்பிய சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    3-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லெவிஸ் லெக் சைடில் தூக்கி அடித்தார். பந்து எட்ஜ் ஆகி மிக உயரமாக சென்று ஸ்டூவர்ட் பின்னி நோக்கி வந்தது. நேராக வந்த பந்தை கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் 5 ரன்னில் இருந்து தப்பிய லெவிஸ் 42 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.



    19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பென் கட்டிங் அடித்த பந்தை ஆர்சர் கேட்ச் பிடிக்க தவறவிட்டார். இதனால் ஒரு ரன்னில் தப்பிய பென் கட்டிங் 10 ரன்கள் அடித்தார். மாறாக சஞ்சு சாம்சன் லெவிஸ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அத்துடன் இஷான் கிஷானை 12 ரன்னில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

    3-வதாக கடைசி ஓவரின் 5-வது பந்தை ஹர்திக் பாண்டியா லெக் சைடு தூக்கி அடித்தார். அந்த பந்தை சஞ்சு சாம்சன் அந்தரத்தில் பறந்த கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி வீரேந்தர் சேவாக் சாதனையை சமன் செய்துள்ளார்.#IPL2018 #MIvRR
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.

    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. 11-ந்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.



    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்தார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவுட்டாகாமல் 95 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதங்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற சாதனையை வீரேந்தர் சேவாக் உடன் பகிர்ந்துள்ளார்.

    இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் தாக்குப்பிடித்து வருகிறது.
    மும்பை வான்கடேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvRR
    மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் அடித்தது. அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ரன்னாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

    மறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 12-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 37 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் ரன் குவிக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியா தலையில் விழுந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.


    ஹர்திக் பாண்டியா பந்தை உபர் கட் செய்த காட்சி

    19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அதோடு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை சர்வசாதரணமாக ஆஃப் சைடு சிக்ஸ்க்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது.


    அரைசதம் அடித்த லெவிஸ்

    கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பென் கட்டிங் சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். அதை சஞ்சு சாம்சன் பறந்து சென்று கேட்ச் பிடித்தார். ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    ×