என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MNM"
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
- பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- ஒரு தெருவில் மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன என்றார் கமல்ஹாசன்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:
இந்தத் தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்க்கக் கூடாது. அனைவருக்கும் கடமை உள்ளது.
ஒரு தெருவில் இருக்கவேண்டிய மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை செய்யலாம்.
இதுபோன்ற விழிப்புணர்வு பதாகைகள் டாஸ்மாக் கடை அருகில் இருக்க வேண்டும்.
மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளது.
வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
விஷ சாராயம், கள்ளச்சாராயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில் படும்படி எடுத்துச்சொல்லும் அறிவுரைகள் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.
- இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
- உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.
அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் 'ஒரே கட்டமாக தேர்தல்' நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
- தி.மு.க. கூட்டணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் 1 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.
மேலும் இந்த உடன்பாட்டில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விட்டு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்கள் கட்சி சார்பிலும் வேறு யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும்.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது எனவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.
பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பாஜக-வின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானம் படுத்துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டார்.
மத்திய சென்னையில், கமீலா நாசர், வடசென்னையில் முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முதல் வேட்பாளர் பட்டியலில் 3 மருத்துவர்கள், 5 வக்கீல்கள், முன்னாள் ஐஜி, முன்னாள் நீதிபதி ஆகியோரும் 8 தொழில் அதிபர்களும் வேட்பாளர்களாகி உள்ளனர்.
21 பேரில், 15க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழானவர்கள். அனைவருமே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதில் 3 பேர் எம்.பில். பட்டதாரிகள்.
2-வது கட்ட பட்டியல் விரைவில் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென்சென்னையிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
‘கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார். இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். ஒரு பூத்துக்கு 9 பேர் வீதம், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 4500 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 24-ந்தேதி வெளியிடப் போகும் தேர்தல் வாக்குறுதிகளோடு, தொகுதியின் முக்கியமான பிரச்சினைகளையும் மையமாக வைத்து பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாத கடைசியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.
ரசிகர் மன்றத்தை சார்ந்த ஒருவர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அடுத்த வேட்பாளர் பட்டியலில் சிநேகன் பெயரும் இடம்பெற உள்ளது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் கமல் கூறியதாவது:-
எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கவனம் செலுத்தியுள்ளோம். குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
என் சின்ன வயதில் இருந்தே ஈர்த்த வாக்குறுதிகளைதான் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அளித்துள்ளன. அதை செயல்படுத்ததான் அவர்களால் முடியவில்லை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் களமிறங்கி உள்ளோம்.
நமது தமிழ் நாட்டை ஆங்கிலத்தில், ‘லேன்ட் ஆப் ரைசிங் சன்’ என்பார்கள். அந்த சன், சூரியனல்ல, வாரிசுகள் என்பது இப்போதுதான் புரிகிறது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை 2 கட்டமாக பார்க்க வேண்டும். சட்டம், கருணை. இப்போது கருணை தேவை என்று நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட பயப்படவில்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LSPolls #MNM
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார்.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.
வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதே தன்னை கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் சமூக வலைத்தளங்களில் முன்னிறுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கட்சி தலைமையிடம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் குமரவேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது என அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CKKumaravel #MNM #KamalHaasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்