என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobiles"

    • தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
    • புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இறக்குமதி வரி குறைப்பு விவரம் வருமாறு:

    தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து வரி 6.4 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    சில குறிப்பிட்ட தோல் பொருட்களுக்கான வரி விதிப்புகளும் குறைக்கப்படும்.

    மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

    இதையடுத்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் செல்போன் போன்றவைகளின் விலை குறைகிறது.

     

    மேலும் புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது

    இதேபோல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக அதிகரிக்கப்படும்.

    தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

    அம்மோனியம் நைட்ரேட், பிளாஸ்டிக் சாதனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் விலை உயர்கிறது.

    ×