என் மலர்
நீங்கள் தேடியது "Mohammad Rizwan"
- வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும்.
- சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்.
சாம்பின்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சொந்த மண்ணில் நடந்த போட்டி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாததால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் அணியின் தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம். எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சைம் அயூப், ஃபகர் ஜமான் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தியது."
"ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட சைம் அயூப் காயமடைந்ததால் விலகினார். இது அணியின் சமநிலையை பாதித்தது. ஆனால் தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை."
"நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும். கடந்த சில போட்டிகளில் நாங்கள் தவறுகளை செய்துள்ளோம். அதிலிருந்து கற்றுக்கொண்டு அதை சரிசெய்வோம் என்று நம்புகிறோம். நாங்கள் அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறோம். அங்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.
- அக்சர் பட்டேல், முகமது ரிஸ்வான், கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
- செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.
அந்த வகையில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மட்டும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரிஸ்வான் கடந்த மாதம் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது.
- ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை.
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.
முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர்.முஹம்மது ரிஸ்வானின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் .
இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷகித் அப்ரிடி கூறியதாவது:-
நீங்கள் பந்து வீச்சில் அல்லது பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது. 11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்கள் ஆவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை. அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் அசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
- 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
- இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.
கராச்சி:
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று கராச்சியில் நடந்தது.
இங்கிலாந்து நிர்ணயித்த 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவரில் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 110 ரன்னும், முகமது ரிஸ்வான் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தனர். இதன் மூலம் பாபர் ஆசாம்-முகமது ரிஸ்வான் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
இதற்கு முன்பு இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.
அந்த சாதனையை அவர்களே முறியடித்தனர். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது. 3-வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.