என் மலர்
நீங்கள் தேடியது "Mohammad Siraj"
- தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ் பகிர்ந்துள்ளார்
- உங்களை நீங்கள் நம்பினால், விரும்பியதை அடைய முடியும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.
தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.