search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moin Khan"

    • டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • அவர் உடல் பருமன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மொயின் கான். இவருடைய மகன் அசாம் கான். இவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரர். ஆனால் உடற்தகுதி என்று எடுத்துக் கொண்டால், குண்டாக காணப்படுவார். இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படி கீப்பிங் செய்வார் என்று ரசிகர்கள் ஏளனம் செய்வார்கள். அதற்கு ஏற்றபடி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின்போது விக்கெட் கீப்பராக சோபிக்கவில்லை. பேட்டிங்கில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தன்னுடைய மகன் அசாம் கானை மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர் ரமீஸ் ராஜா. மற்றும் அணியில் இருந்து நீக்கியவர் என மொயின் கான் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மொயின் கான் கூறியதாவது:-

    2022 (2021) உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கு அசாம் கான் தேர்வு பெற்றார். ஆனால் ரமீஸ் ராஜா அவரை நீக்கினார். அந்த நேரத்தில் தலைமை தேர்வாளர் தவறு செய்திருந்தால், அவர் நீக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு தைரியம் இல்லை. இதன்முடிவு அவர்கள் ஒரு இளம் வீரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அதேபோல் இந்த உலகக் கோப்பையிலும் அவர் எப்படி விளையாடினார் என்பதை பார்த்து இருப்பீர்கள்.

    நான் இந்த உலகக் கோப்பை போட்டிகள், அதற்கு முன் நடைபெற்ற பயிற்சி போட்டிகள் அனைத்து போட்டிகளையும் பார்த்தேன். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அசாம் நம்பர் ஒன் தேர்வாக இருப்பது போல் தோன்றியது. ஒரு போட்டிக்குப்பின் திடீரென ஒட்டுமொத்த வியூகமும் மாற்றப்பட்டது. ஒரேயொரு பந்தை சந்தித்து ஆட்டமிழந்த பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மீது மட்டும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் சொல்லமாட்டேன். அசாம் கான் மீதும் தவறு உள்ளது. அவர் தனுக்குத்தானே உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை பெற வேண்டியது அவசியம். மற்ற வீரர்களை போன்று உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அவர் தனது பிட்னஸில் முன்னேற்றம் கண்டு வருவதை நான் உணர்கிறேன். 

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என்று முன்னாள் கேப்டன் மொயின்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MoinKhan #2019WorldCup
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும். அந்த அளவுக்கு எங்கள் அணி வீரர்களிடம் திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கிலாந்தில் 2 வருடத்திற்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்கள் அணியினர் இந்திய அணியை வீழ்த்தினார்கள். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். எங்கள் அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது.

    கடந்த பல வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி நன்றாக செயல்பட்டு வருகிறது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நிலவும் வானிலையை கணிக்க முடியாது. ஆடுகளம் ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். இவையெல்லாம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அம்சமாகும்.

    எங்கள் அணி வீரர்கள் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு நாங்கள் உலக கோப்பை போட்டிக்கு செல்வது நல்ல விஷயமாகும். கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சிறுவயது முதல் எனக்கு தெரியும். தற்போது பாகிஸ்தான் அணியை வழிநடத்த அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை.

    இவ்வாறு மொயின்கான் கூறினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-இந்தியா அணிகள் இதுவரை 6 முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றது இல்லை. வரும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் ஜூன் 16-ந் தேதி லீக்கில் மோதுகின்றன.  #MoinKhan #2019WorldCup

    ×