என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mominul Haque"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 450 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 115 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மைக்கேல் லூயிஸ் 97 ரன்னும், அலிக் அதான்ஸ் 90 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கீமர் ரோச் 47 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மொமினுல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அவுட்டானார். லிட்டன் தாஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஜேகர் அலி சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 181 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆசிய கோப்பைக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளதால், அந்த அணிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஷாகிப் அல் ஹசன் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அவர் எப்படியும் குணமடைந்து விடுவார் என்று வங்காள தேச கிரிக்கெட் அணி நம்பிக்கையில் இருந்தது.



    ஆனால் தான் 20 முதல் 30 சதவிகிதம் உடற்தகுதி மட்டுமே பெற்றுள்ளேன் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்தார். இதனால் வங்காள தேச அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட தொடக்க வீரர் தமிம் இக்பாலின் வலது கை விரலில் முறிவு ஏற்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. ஒரே நேரத்தில் முக்கியமான இரண்டு வீரர்கள் காயத்திற்குள்ளானதால் வங்காள தேச அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ×