என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moolavar"

    • கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறை கற்கள் கொண்டுவரப்பட்டன
    • 3 சிலைகளை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அயோத்தி:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான மூலவர் குழந்தை ராமர் சிலை அடுத்தவாரம் தேர்வு செய்யப்படும் என அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், 'மூலவர் குழந்தை ராமர் சிலை செய்வதற்காக கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறை கற்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் இருந்து 3 சிலைகளை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அந்த 3 சிலைகளில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய சிறந்த சிலையை கோவில் அறக்கட்டளை வருகிற 15-ந் தேதி தேர்ந்தெடுக்க உள்ளது' என்றார்.

    ×