என் மலர்
முகப்பு » mosquito spray
நீங்கள் தேடியது "Mosquito spray"
- டெங்கு கொசு பரவலை தடுக்க நடவடிக்கை
- ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்கும் நோக்கில் எவர்கிரீன் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொண்டனர்.
இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வீதிவீதியாக சென்று கழிவுநீர் தேங்கும் இடங்கள், அங்கன்வாடி மையம், மற்றும் இதர பகுதிகளில் மருந்துகளை தெளித்தனர்.
இந்த பணியை ஊராட்சிமன்ற தலைவர் திவ்யபாரதி தினேஷ், எவர்கிரீன் நிறுவன உரிமையாளர் மதன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
×
X