என் மலர்
நீங்கள் தேடியது "mother dead"
- வீட்டை காலி செய்து விட்டு 2 மகள்களுடன் எங்கே செல்வது என மனவேதனை அடைந்தார்.
- தாயின் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத், புத்த நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 45). இவருடைய கணவர் ராஜு. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு ரவலிகா (24), யஷ்விகா (22) என 2 மகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக லலிதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் லலிதா தனது தாயின் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்தார்.
லலிதாவின் தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனக்கு துணையாக இருந்த தாய் இறந்து விட்டதால் லலிதா விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில் 3 மாதங்களாக வீட்டு வாடகை கட்டாததால் வீட்டில் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 21-ந் தேதி தெரிவித்தார்.
வீட்டை காலி செய்து விட்டு 2 மகள்களுடன் எங்கே செல்வது என மனவேதனை அடைந்தார். இதனால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட மகள்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.
தாயின் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர். தாயின் பிணத்தை ஒரு அறையில் வைத்து விட்டு மறு அறையில் தங்கினர். கடந்த 9 நாட்களாக தாயின் பிணத்துடன் வசித்து வந்தனர். நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனை அருகில் உள்ளவர்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என எண்ணிய மகள்கள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். தாய் இறந்தது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் லலிதாவின் இறுதி சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:
மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 42). தொழிலாளி. இவரது தாயார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்தார். இதனால் முத்துகாமாட்சி மன வேதனை அடைந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துகாமாட்சி தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே முத்துகாமாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த அரியூர்பேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சுந்தரமூர்த்தியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த சோகம் தாங்க முடியாமல் சுந்தரமூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்த நிலையில் நேற்று சுந்தரமூர்த்தியின் தாயார் நினைவு தினம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
இதை பார்த்த சத்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சுந்தரமூர்த்தி இறந்து போனார்.
இதுகுறித்து சத்யா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மங்கலம் கோர்க்காடு அம்மன்நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (42 லாரி டிரைவர். இவரது மனைவி வேம்பு (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதேபோல் நேற்றும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த பார்த்திபன் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேம்பு கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.