search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MoU signed"

    • சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
    • கடந்த 2023ம் ஆண்டு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தான நிலையில், இந்தாண்டு 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 3-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 16ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

    கடந்த 2023ம் ஆண்டு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தான நிலையில், இந்தாண்டு 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "உலகைத் தமிழுக்குக் கொண்டு வருதல்; தமிழை உலகிற்குக் கொண்டு செல்வது" - இந்தியாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வியால் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான முயற்சி புதிய மைல்கற்களை அமைத்துள்ளது.

    2023 இல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024 இல் 752 ஆக வளர்ந்து, இப்போது #CIBF2025-ல் 1125 ஐ எட்டியுள்ளது - 1,005 ஒப்பந்தங்கள் தமிழ் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கும், 120 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு மொழி புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் ஆனவை.

    தமிழ் அறிவுஜீவிகள் இந்த சாதனைக்கும், தமிழ் இலக்கியத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்திற்கும் நமது திராவிட மாதிரி அரசாங்கத்தின் அனுமதிக்கும் மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர். நமது எழுத்தாளர்கள் ஞானபீடத்தை மட்டுமல்ல, நோபலையும் வெல்ல வேண்டும் என்று இலட்சியமிடுவோம்!

    இந்த சிறந்த சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ்

    மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்று செயல்பட நடவடிக்கை.

    மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை அளிப்பதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன்  3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தத்தில், ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இரு அமைச்சகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவது என்றும், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆயுஷ் கிரிட் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    ×