என் மலர்
முகப்பு » Mudhalvan 2
நீங்கள் தேடியது "Mudhalvan 2"
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தை விஜய்யை வைத்து இயக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். #Mudhalvan2 #Shankar #Vijay
வெற்றி பெறும் படங்களில் இரண்டாம் பாகங்களை எடுப்பதில் தமிழ் சினிமா இயக்குநர்கள் மும்முரமாக இருக்கின்றனர். ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியானது. இப்போது இந்தியன் 2-ம் பாகத்திலும் நடிக்க தயாராகிறார். தேவர் மகனின் அடுத்த பாகமும் தயாராக உள்ளது.
சூர்யாவின் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வெளியாகின. விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. தனி ஒருவன் 2, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் உருவாகுகின்றன.
இந்த நிலையில், அர்ஜுன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி ஊழலை ஒழிப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
முதல்வன் படம் வெளியாகி 19 வருடங்கள் முடிந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தை முடித்ததும் முதல்வன்-2 பட வேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்று தெரிகிறது.
டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் முதல்வன்-2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று ஷங்கர் பதில் அளித்தார். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதால் விஜய்க்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தரப்பில் இதுகுறித்து கேட்ட போது, அவர் தற்போது தளபதி 63 படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகே அடுத்த படம் குறித்து முடிவு எடுப்பார் என்று தெரிவித்தனர். #Mudhalvan2 #Shankar #Vijay #Thalapathy63
×
X