என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mukul Roy"
- சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார்.
- சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக தகவல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் பாஜகவில் இணைய விரும்புவதாக கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்த முகுல் ராய், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் பாஜகவுக்கு தாவினார். 2020ல் பாஜக தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திடீரென மமதா பானர்ஜியின் தலைமையை ஏற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கட்சியினரும் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
அதன்பின்னர் நேற்று மாலை செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முகுல் ராய் கூறியதாவது:-
நான் பாஜக சட்டமன்ற உறுப்பினர். நான் பாஜகவுடன் இருக்க விரும்புகிறேன். உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் கட்சி தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த பேச விரும்புகிறேன்.
சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன். தற்போது நான் நலமாக உள்ளேன், மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளேன். அதேசமயம் திரிணாமுல் காங்கிரசுடன் ஒருபோதும் இணைந்து செயல்படமாட்டேன் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. இதேபோல் என் மகன் சுபரங்ஷுவும் பா.ஜ.க.வில் சேர வேண்டும், அது அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் 9-2-2019 அன்று நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்றார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த
டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மார்ச் 7-ம் தேதிவரை முகுல் ராயை கைது செய்ய தடை விதித்து முன்ஜாமின் அளிக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #MukulRoyAnticipatorybail #SatyajitBiswasmurder
மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் முகுல் ராய் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவின் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறவுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இருந்த இவர், முன்னர் மத்தியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆறுமாதங்கள் ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்தார். தலைமை மீது கொண்ட கருத்து வேற்றுமையால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், முகுல் ராயின் அரசியல் குருவாக இருந்த மிரினால் கான்ட்டி சிங்கா ராய் என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரி தொடர்ந்த வழக்கில் முகுல் ராய்க்கு கொல்கத்தா ஐகோர்ட் இன்று முன் ஜாமின் அளித்துள்ளது.
கடந்த 8-6-2011 அன்று வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரப்பாரா - ஹலிசாஹர் சாலை வழியாக வாகனத்தில் சென்ற மிரினால் கான்ட்டி சிங்கா ராய் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓரளவுக்கு உடல்நிலை தேறிய அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்காமல் முகுல் ராயின் யோசனையின்படி கொல்கத்தாவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லாட்ஜில் தங்கி இருந்த மிரினால் கான்ட்டி சிங்கா ராய், தொண்டை தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு தொண்டையில் இருந்த ரத்தக்கசிவு காரணமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் பின்னர் தெரிய வந்ததாகவும், அவரது மரணத்தில் முகுல் ராய்க்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகப்பட்ட மிரினால் கான்ட்டி சிங்கா ராயின் சகோதரி சோனாலி, தனது புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டதால் கொல்கத்தா ஐகோர்ட்டின் உதவியை நாடினார்.
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க.வில் இணைந்துவிட்ட முகுல் ராய் இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ய கூடாது என கொல்கத்தா ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்ததால் அவரை கைது செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், முகுல் ராயிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் காப்புறுதி பத்திரத்தை பெற்ற கொல்கத்தா ஐகோர்ட் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் அளித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்கு உட்பட்ட பிஜப்பூர் போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராக வேண்டும் என அவருக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #MukulRoy #MrinalKantiSinghaRoy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்