என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mullaiperiyar dam"

    • முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது.
    • மழை கைகொடுத்தால் 2-ம் போக நெல்சாகுபடி பணிகளை துரித்தப்படுத்து வார்கள்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 818 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 673 கன அடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 526 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். மழை கைகொடுத்தால் 2-ம் போக நெல்சாகுபடி பணிகளை துரித்தப்படுத்து வார்கள்.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.18 அடியாக உள்ளது. 926 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1688 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் பாசனத்திற்கு 92 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ள நிலையில் மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ளது. மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணைக்கு 965 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடித்து வருகிறது. தொடர் மழையால் நீர்வரத்து 1899 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து மதுைரமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 178 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 138 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.51 அடியாக உள்ளது. 127 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 97 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 0.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, போடி 2.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அணையின் நீர்மட்டத்தை சீராக உயர்த்தி நீர்திறப்பை குறைத்து 142 அடிவரை தேக்கி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்து விட்டதால் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ரூல்கர்வ் விதிப்படி முல்லைபெரியாறு அணை யில் வருகிற 20-ந்தேதிவரை 140 வரையிலும், 30-ந்தேதி வரை 142 அடிவரையிலும் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம். இதனால் அணையின் நீர்மட்டத்தை சீராக உயர்த்தி நீர்திறப்பை குறைத்து 142 அடிவரை தேக்கி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள னர்.

    இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. வரத்து 1250 கனஅடி, திறப்பு 667 கனஅடி, இருப்பு 6660 மி.கனஅடி.

    வைகைஅணையின் நீர்மட்டம் 69.91 அடியாக உள்ளது. வரத்து 1195 கனஅடி, திறப்பு 1469 கனஅடி, இருப்பு 5802 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 132 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடி, வரத்து 86 கனஅடி, இந்த 2 அணை களும் முழுகொள்ளளவை எட்டிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    • 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 667 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 511 கனஅடியாக இருந்தது.

    அணையின் நீர்மட்டம் 138.20 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் 142 அடியை மீண்டும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 1257 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கனஅடிநீர் வருகிறது. இதில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 92 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கேரளாவில் தன்னார்வலர்கள், சமூகசெயல்பாட்டாளர் என்ற போர்வையில் பலர் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • கல்லூரி மாணவர்களிடம் பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம் பரபரப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் தன்னார்வலர்கள், சமூகசெயல்பாட்டாளர் என்ற போர்வையில் பலர் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சியினரையும் தாண்டி இவர்கள் பெரியாறு அணை குறித்து பல்வேறு குறும்படங்கள் தயாரித்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர்.

    இதற்கு கேரள மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களிடமும் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களிடம் பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம் பரபரப்பட்டு வருகிறது. கேரளமாநிலம் அங்கமாலி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த 22-ந்தேதி முதல் 3 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் அணை குறித்து வக்கீல் ரசல்ஜோ என்பவர் தவறான தகவல்களை மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த அணை உடைந்தால் இடுக்கி அணையும் உடையும். அப்போது இப்பகுதி மக்கள் ஒருவர்கூட பிழைக்கமுடியாது. எனவே அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரசாரங்களை மேலும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கஒருங்கிணை்பபாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பலமுறை ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் தொடர்ந்து பொய்பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கேரள அரசும் இதுபோன்ற நபர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

    இதனால் இருமாநில மக்களிடையே பதட்டமான போக்கு ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களிடம் பொய்யான பிரசாரங்களை செய்து வரும் ரசல்ஜோய் மற்றும் அவருடைய கூட்டாளிகளை மத்திய உளவுத்துறை கண்காணித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கோர்ட்டு உத்தரவையடுத்து 2015, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அணையின் நீர் மட்டம் 142 அடி வரை நிலை நிறுத்தப்பட்டது.
    • அடுத்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி வரை அணையில் 142 அடி தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதார மாகவும் உள்ளது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள லாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து 2015, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அணையின் நீர் மட்டம் 142 அடி வரை நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நீர் மட்டத்தை 140 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு பருவமழை காலத்தில் தண்ணீர் தேக்கும் ரூல் கர்வ் முறைப்படி நீர் மட்டத்தை 142 அடியாக மத்திய நீர் வள ஆணையம் நிர்ண யித்தது. ஆனால் கேரள அரசு இதை ஏற்க மறுத்து 140 அடியாக குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கேரளாவில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள அரசு வாதத்தை முன் வைத்தது. பின்னர் மத்திய நீர் வள ஆணையம் ரூல் கர்வ் முறைப்படி நீர் மட்டத்தை 140 அடியாக நிர்ணயம் செய்தது.

    ஜனவரி 10-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தண்ணீர் தேக்கும் அளவை நிர்ணயித்து கால அட்டவணை வெளியிட ப்பட்டது. அதன்படி ஜனவரி 10-ந் தேதி முதவ் 10 நாளுக்கு ஒரு முறை வீதம் நவம்பர் 30-ந் தேதி வரை தண்ணீர் தேக்கும் அளவு குறித்து கால அட்டவணை யால் கடந்த ஆகஸ்டு மாதம் அணையின் நீர் மட்டம் 138 அடியாக உயர்ந்த நிலையில் கேரளாவுக்கு கூடுதல் உபரிநீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நவம்பர் 30-ந் தேதியுடன் கால அட்டவணை முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி வரை அணையில் 142 அடி தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டு ள்ளது. எனவே மீண்டும் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 139 அடியாக உள்ளது. 1123 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணை நீர் மட்டம் 66.21 அடியாக உள்ளது. 1112 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்து க்காக 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.57 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 285 கன அடியாக சரிந்துள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதனைத் தொட ர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 285 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து 140.85 அடியாக உள்ளது.

    இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர். நேற்று தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 511 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கும் மதுரை மாநகர குடிநீருக்கும் 2569 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1566 கன அடியாக குறைந்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. அணைக்கு 80 கன அடிநீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.79 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி நீர் வருகிறது. 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
    • இதனால் நீர் மட்டம 131.50 அடியாக சரிந்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்டவிவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் கேரள அரசு நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதை ஐவர் மற்றும் மூவர் குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் மட்டம 131.50 அடியாக சரிந்துள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1467 கன அடியில் இருந்து 1400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 52.62 அடியாக உள்ளது. அணைக்கு 1154 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 50.95 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.37 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • இதனால் கடந்தமாதம் 142 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 129.15 அடியாக சரிந்துள்ளது.
    • ஒரே மாதத்தில் சுமார் 13 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையிலிருந்து 1167 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    152 அடி உயரம் கொண்டுள்ள முல்லைபெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அணையை கண்காணிக்க மூவர் குழுவும் அவர்களுக்கு உதவியாக ஐவர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அணையை கண்காணித்து உறுதித்தன்மை குறித்த அறிக்கையை சமர்பித்து வருகின்றனர்.

    பலமுறை சோதித்து பார்த்தபின்னரும் அணை உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் கேரளா அரசு நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பருவமழையின் போது நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்ந்தது.

    அதனைதொடர்ந்து சில நாட்கள் அதே நீர்மட்டத்தில் நிலைநிறுத்தி அதிகாரிகள் கண்காணித்தனர். தமிழக விவசாயத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு 107 கனஅடிநீர் மட்டுமே வருகிறது.

    ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்தமாதம் 142 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 129.15 அடியாக சரிந்துள்ளது. ஒரே மாதத்தில் சுமார் 13 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையிலிருந்து 1167 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.66 அடியாக உள்ளது. 879 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.75 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.14 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • அணையில் பருவநிலை மாற்றங்களின்போது அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது
    • அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை கண்டறியும் ஒரு ஆக்சிலோகிராப், 2 சீஸ்மோகிராப் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    ஆனால் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என ெதாடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக உச்சநீதிமன்றம் மூவர் குழு அமைத்தது. மேலும் அவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அணையில் ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து வருகின்றனர்.

    அதன்படி தற்போது அணையில் பருவநிலை மாற்றங்களின்போது அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. மத்திய நீர்வளக்குழு செயற்பொறியாளர் சதீஸ் தலைமையில், தமிழக அரசு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஷாம்இர்வின், கோட்டபொறியாளர் குமார், கேரள அரசின் பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை நீர்பிரிவு செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவிபொறியாளர் பிரசித் ஆகியோர் தேக்கடி படகுதுறையில் இருந்து அணைப்பகுதிக்கு சென்றனர்.

    அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை கண்டறியும் ஒரு ஆக்சிலோகிராப், 2 சீஸ்மோகிராப் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட துணைக்குழுவினர் கருவியின் செயல்பாடு குறித்த விளக்கங்களை கேட்டறிந்தனர். பின்னர் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதியில் நீர்கசியும் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் கேரளாவுக்கு உபரிநீர் செல்லும் 13 மதகுகளில் 3 மதகுகளை இயக்கி பார்த்தனர்.

    மாலையில் குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வல்லக்கடவு வழியாக தரைப்பாலம், சாலை அமைக்க வேண்டும் என தமிழக பொறியாளர்கள் வலியுறுத்தினர். மத்திய கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்த சரவணக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டதால் சதீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பங்கேற்கும் முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்லைபெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக 4 டிப்பர் லாரி கற்கள் வண்டிபெரியாறு, வல்லக்கடவு வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது போலீசார் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். டிரைவர் மட்டும் இருக்கவேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் இருக்ககூடாது என தெரிவித்தனர். மேலும் 3 டிப்பர் லாரிகளில் வந்த பணியாளர்கள் ராஜன், ரெஞ்சு, சபரீசன் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கடந்தமாதம் 142 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது.
    • தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் அணையின் நீர் மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கடந்தமாதம் 142 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. அதே வேளையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் அணையின் நீர் மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.80 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 633 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3380 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர் மட்டம் 130 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் தற்போது நீர் மட்டம் சரிந்துள்ளதால் அதற்குள் கோடை மழை பெய்து நீர் மட்டம் உயருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 55.54 அடியாக உள்ளது. வரத்து 502 கன அடி. திறப்பு 769 கன அடி. இருப்பு 2707 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 46.36 அடி. வரத்து 38 கன அடி. திறப்பு 75 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.42 அடி. திறப்பு 25 கன அடி.

    • 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் தமிழக பகுதிக்கு 678 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 123.30 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது. 432 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.95 அடியாக உள்ளது. 37 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×