என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Accident"

    • கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கடற்கரையில் படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கடற்படையின் படகு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே நேற்று கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    விபத்து தொடர்பாக இந்திய கடற்படை அறிக்கையின்படி, எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை இந்தியா கேட்வேக்கு ஏற்றிச் சென்ற வேகப் படகு, கடலில் என்ஜின் சோதனையின் கீழ், இயங்கி வந்த கடற்படை விரைவுப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    இறந்தவர்களில் கடற்படை படகில் இருந்த இருவர் உட்பட 12 பொதுமக்கள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் இருந்த 99 பேர் மீட்கப்பட்டனர்.

    மேலும், மாயமானவர்களை மீட்பதற்காக அப்பகுதியில் 11 கடற்படை படகுகள், மரைன் போலீசாரின் 3 படகுகள் மற்றும் கடலோர காவல்படையின் ஒரு படகு ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சகினாகாவைச் சேர்ந்த நதரம் சவுத்ரி என்கிற விபத்தில் உயிர் பிழைத்த நபரின் புகாரின் அடிப்படையில் கொலாபா போலீசார் கடற்படை படகின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சாலை விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 19 வயது இளைஞர் ஓருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.

    இந்த விபத்து, வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் நடந்துள்ளது.

    உயிரிழந்த சிறுவன் ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடேவின் குடும்பம் , நடைபாதையில் வசிப்பதாகவும், அவரது தந்தை ஒரு தொழிலாளி என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஹூண்டாய் க்ரெட்டா காரை ஓட்டி வந்த சந்தீப் கோல் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி உள்ளது. சமீபத்தில், மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) நிறுவனத்தால் இயக்கப்படும் மின்சாரப் பேருந்தின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி குர்லாவில் நடந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    கடந்த ஐந்தாண்டுகளில் அதிக சாலை விபத்துகளை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.

    பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2018-2022 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

    உத்தரப் பிரதேசத்தில் அதிக சாலை விபத்து இறப்புகள் (1,08,882), தமிழ்நாடு (84,316) மற்றும் மகாராஷ்டிரா (66,370) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    மும்பையில் கட்டுமானப் பணியின்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். #MumbaiAccident #BuildingCollapses
    மும்பை:

    மும்பை தாராவியில் உள்ள பிஎம்ஜிபி காலனியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சாலையோரம் நின்றவர்கள், சாலையில் சென்றவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.  

    இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “இரவு 10.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர் ஆட்டோ டிரைவர். பைக்கில் சென்ற ஒருவர் பலத்த காயமடைந்தார். அவரை நாங்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்” என்றார். #MumbaiAccident #BuildingCollapses
    ×