என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mumbai court"
- தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை ஆகாது என மும்பை கோர்ட் கூறியுள்ளது.
- வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளது என்றார் நீதிபதி.
மும்பை:
மகாராஷ்டிர அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவரது குடும்ப வாழ்க்கை 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, பெண்களைப் பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் கடந்த 2015-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த கோர்ட்டு அவரது மனுவை நிராகரித்தது.
இதனால் அவர் மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில் அவர், எனது கணவர் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டில் இருந்தார். அப்போது அவர் தாயின் சிகிச்சைக்காக தொடர்ந்து பணம் அனுப்பினார். அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்தார். இது எனது திருமண வாழ்க்கையில் மோதலுக்கு வழிவகுத்தது என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிஷ் அயாச்சி தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
1993-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில் தான் அவர்களின் திருமணம் முறிந்துள்ளது. திருமண வாழ்க்கையில் கணவர் எதிர்கொண்ட போராட்டங்கள், தற்கொலை முயற்சிகள் போன்ற ஆதாரங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் அவரது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கிறார் என்று குறை கூறுவதை குடும்ப வன்முறையாகக் கருதமுடியாது. குடும்ப வன்முறைக்கு ஆளானார் என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார். பெண்ணின் கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என முடிவு செய்து இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
- பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர்.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மும்பை :
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் முல்லுண்டு பகுதியில் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை மஜ்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 34 வயது பெண்ணை ஒரு ஆண்டு தேவ்னாரில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஒழுக்ககேடாக எதையும் செய்யவில்லை என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.பாட்டீல், "பெண்ணை ஒரு ஆண்டு காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார்.
மேலும் உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-
சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே தவறு செய்தார் என்பதற்காக, அவர் மீண்டும் அதே தவறை செய்து இருப்பார் என போலீசார் பிடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர். அவர் வேலை செய்ய உரிமை இருக்கிறது. சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல. பொது இடங்களில் பாலியல் தொழில் செய்து, அதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் தான் குற்றம் என கூற முடியும்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த சூழலில் ஏற்கனவே நடந்ததை வைத்து பெண்ணை பிடித்து காப்பகத்தில் அடைத்து வைத்து இருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய் வேண்டும். பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக காப்பகத்தில் அடைத்து வைப்பது, அவர் நாடு முழுவதும் சென்று வரும் உரிமைக்கு தடையாக இருக்கும். சட்டப்படியும், பெண்ணின் வயதின்படியும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அனுமதியை மும்பை தனிக்கோர்ட்டு வழங்கியது.
வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் நேரில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே வெளிநாடு தப்பிச்செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அவரது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் அனுமதி கோரி இருந்தனர்.
இந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி கடன் மோசடி வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சட்டத்தின்படி விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராக தவறினால், வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #Summon #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்