என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mumbai rain"
- அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி உள்ளது.
மகாராஷ்டிராவில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை முதல் மிகக் கனமழை (115.6 முதல் 204.4 மிமீ வரை) பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் பெய்த கனமழையால் சில பொது போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி உள்ளது.
- மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
- ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இடைவிடாமல் பெய்த கனமழையால், விமான நிலையத்தில், ஆபரேட்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள குறிப்பாக அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.
மும்பையில் 82 மிமீ மழை பெய்துள்ளது
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, மும்பையில் மாலை 4 மணி வரை நகரில் 82 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 96 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக மும்பை முழுவதும் விமான சேவைகள் மட்டுமின்றி சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய ரயில்வேயின் துறைமுகப் பாதையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அடுத்த 18-24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மழை வெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
- மழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
மும்பை:
மும்பையில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மும்பையில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மும்பை மற்றும் அதன் புறநகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மழை வெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- மந்த்ராலயாவில் ஷிண்டே பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.
- கடலோர பகுதிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள், விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் கனமழை நிலவரம் குறித்து மந்த்ராலயாவில் கூட்டத்தை நடத்தி பிரஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, மந்த்ராலயாவில் ஷிண்டே பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.
இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்துள்ளது, இதனால், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
முனிசிபல் கார்ப்பரேஷனின் 461 மோட்டார் பம்புகளும், ரயில்வேயின் 200 பம்புகளும் இயங்குகின்றன. காலையில் இருந்து அனைத்து துறைகளுடன் தொடர்பு கொண்டேன். மத்திய மற்றும் துறைமுக ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தேன். கடலோர பகுதிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
- மும்பையில் 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
- மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனே, ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. வடாலா மற்றும் ஜிடிபி நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்தேரி, குர்லா, பாண்டுப், கிங்ஸ் சர்க்கிள், தாதர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கனமழையால் நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
- சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.
- இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார்.
பருவமழை தாமதமாகிய நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அந்தேரி தகிசர் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் கோவண்டி, சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.
அப்போது அவர்கள் தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் சாக்கடையில் விழுந்த 2 பேரையும் மீட்டு ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் 2 பேரும் ஏற்கனவே பலியானது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தனியார் ஒப்பந்த தொழிலாளர் ராம்கிருஷ்ணா (25), சுதீர் தாஸ் (30) என்பது தெரியவந்தது.
இந்நிலையில், வடிகாலில் மூழ்கி இரண்டு தொழிலாளர்கள் இறந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காத தொழிலாளர் ஒப்பந்ததாரர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி கூறினார்.
- மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை:
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்தநிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சயான், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இன்று காலையில் மழை பெய்ததால் தொடர்ந்து வெள்ளம் தேங்கியபடி இருந்தது.
ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் தவித்தனர். ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன.
தானே, நவி மும்பை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்தது. கடுமையான மழை காரணமாக பேரிடர் மீட்பு குழு மும்பை வாப் மீட்பு பணியில் ஈடுபட்டது. தாழ்வான பகுதியில் இருந்த மக்களை 5 குழுக்கள் மீட்டு வருகிறது.
மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் எம்.பி. லோகூர், தீபக்குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியது. அதில் தலைநகர் டெல்லியில் மலைபோல குப்பை மேடுகள் உள்ளது. அதை அகற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது? டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது.
அத்துடன் திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும் அதற்கு பதில் அளிக்காத 10 மாநிலங்களுக்கு நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.
திடக்கழிவு மேலாண்மை கொள்கைகள் கேள்விக்குறியாகி இருப்பதால் டெல்லியிலும் மும்பையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.#SC
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.
நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் சுமார் 2000 பயணிகள் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து மேற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த ரெயில் நிலையங்களுக்கு கடற்படை வீரர்கள் இன்று காலையில் விரைந்தனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் கடந்து செல்லக்கூடிய மிக உயரமான வாகனங்களில் வந்த அவர்கள், பயணிகளை மீட்கும் பணியை தொடங்கி உள்ளனர். #MumbaiRains #MHRains
மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக மழை கொட்டுகிறது. கனமழையால் மும்பை பெருநகரம் மற்றும் தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி உள்பட பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 66 பேர் சிக்கி இருந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.
சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நேற்றும் சாலை, ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கியது.
மின்சார ரெயில் சேவை மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே பல நீண்டதூர ரெயில் சேவைகளை ரத்து செய்தன. சில ரெயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக 407 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று மும்பையை புயல் தாக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்த மும்பை மாநகராட்சி, இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது.
இதனிடையே இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை போல மீண்டும் ஒரு பாதிப்பை மும்பை பெருநகரம் சந்திக்குமோ என்ற அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கனமழை காரணமாக நல்லசோப்ரா-வசாய் ரெயில் நிலையங்கள் இடையே தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியில் சதாப்தி, வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிக்கி கொண்டன. இதனால் இரு ரெயில்களிலும் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று படகுகள் மூலம் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேபோல் பால்கர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் மழைக்கு யவத்மால் மாவட்டத்தில் 4 பேரும், தானே, பால்கர் மாவட்டத்தில் தலா ஒருவரும், மும்பை பெருநகரில் ஒருவரும் இறந்தனர். மாநிலம் முழுவதும் மழைக்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.
மும்பையில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்றிரவும் மும்பையில் பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.
பலத்த மழை காரணமாக மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று காலை 7.30 மணிக்கு அந்த பாலம் இடிந்தது.
பாலத்தின் ஒரு பகுதி ரெயில் தண்டவாளங்கள் மீது விழுந்தது. அந்த சமயத்தில் ரெயில்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது.
பாலம் இடிந்ததில் அந்த பகுதியில் நின்றவர்களில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த பாலம் வழியாகத் தான் டப்பாவாலாக்கள் உணவு பாத்திரகளை எடுத்து செல்வார்கள். பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு அவர்கள் சேவை தான் முக்கியமானதாகும்.
இணைப்பு பாலம் இடிந்ததால் டப்பாவாலாக்கள் தங்கள் சேவையை இன்று நிறுத்தியுள்ளனர். #MumbaiRain
கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று காலை 11.30 மணிக்கு மராட்டிய மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மராட்டியம் மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்து அங்கு தீவிரமாக மழை கொட்டியது.
மும்பை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புறநகர் ரெயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றன. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இன்றும், நாளையும் மழை மிதமிஞ்சிய அளவில் பெய்யும். 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மும்பை வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #MumbaiRain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்