search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai team"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார்.

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி 1 வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை அணி, முதல் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் 26-ந் தேதி மோத உள்ளது.

    இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மட்டும் அதனை புறக்கணிப்பதாகவும் மும்பை நிர்வாகம் கூறியது.

    மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார். இரண்டு போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    • 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மும்பை:

    மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்தார்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 121 ரன் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 5-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், 27 ஆண்டுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த மும்பை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றனர். #ProKabbadi

    விசாகப்பட்டினம்:

    புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 106-வது ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதுகின்றன.

    ’பிளே ஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட மும்பை அணி 15-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 11-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    டெல்லி அணி ஏற்கனவே இந்த சீசனில் 2 முறை மும்பையிடம் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்துவது டெல்லி அணிக்கு சவாலானதே.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டஸ்- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் 8-வது வெற்றிக்காகவும், உ.பி. யோதா 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    உ.பி. அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்கு டைட்டர்ன்ஸ் அந்த அணியை வீழ்த்தி முன்னேற்ற பாதைக்கு செல்லும் வேட்கையில் உள்ளது.

    ×