search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal president"

    • திருப்பத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் மன்ற தலைவராக பதவி வகித்த அ.புசலான் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பேரூராட்சிக்கு துணை சேர்மனாக பதிவி வகித்த கே.பி.எஸ். பழனியப்பன் கடந்த மாதம் 30-ந்தேதி பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார்.

    தொடர்ந்து புதிய சேர்மன் பதவிக்காக போட்டியிடுவதற்கான அறிவிக்கையை செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் வெளியிட்டார். இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து பொறுப்பு சேர்மனாக பதவி வகித்து வந்த பழனியப்பன் ஒரு மனதாக புதிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி சான்றிதழை அவரிடம் செயல் அலுவலர் வழங்கினார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணன், சேக்கப்பன், நிலோபர்நிஷா, கணேசன், சித்ரா தேவி, அமுதா, அழகு, பாப்பா, குமார், தன பாக்கியம், இளநிலை உதவியாளர் சேர லாதன், வரி தண்டர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் ராம சாமி, கருப்பையா நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மாணிக் கம், முருகேசன், ஜெய்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
    • சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம்,வேலாயுதம்பாளையம்,பள்ளபாளையம், காளிபாளையம், சாமளாபுரம்,கருகம்பாளையம்,கள்ளப்பாளையம்,செந்தேவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.சாமளாபுரம் பேரூராட்சியில் மொத்தமாக 15 வார்டுகள் உள்ளது.

    சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவராக விநாயகாபழனிச்சாமி உள்ளார். அவர் சைக்கிளில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் பற்றியும் , பொதுமக்களிடம் வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

    பின்னர் வி.அய்யம்பாளையம் காலனி பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவரிடம் சமுதாய நலக்கூடம் அமைத்துத்தர வேண்டும் என தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதிக்கொடுத்தனர். பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் இது குறித்து பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கூறுகையில், தினந்தோறும் காலை 6 மணியளவில் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கு எந்தெந்த பகுதியில் வேலை என சரிபார்த்து அனுப்பி வைப்பேன்.

    தொடர்ந்து காலையில் தினந்தோறும் சைக்கிள் மூலமாக சுழற்சி முறையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் ஒவ்வொரு வார்டாக சென்று,மக்களை தேடி பஞ்சாயத்து நிர்வாகம் என்ற அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறேன் என்றார். 

    • தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் .
    • நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் . நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். நகராட்சி சேர்மன் முதல்-அமைச்சருக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, முன்னாள் நகர பொறுப்பாளர் ராஜ்காந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ரெஜிகலா, பீர்பாத் சாகுல்ஹமீது , சித்ரா செல்வக்குமார், செந்தாமரை, மைதீன் அப்துல்காதர், சங்கர நாராயணன், முகமது நைனார், சேக் காதர்மைதீன், நைனார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிச்சையா, குகன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நகர் முழுவதும் சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.றனர்.

    • சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 25-வது வார்டு மூகாம்பிகை காலனி பகுதியில் போதிய அளவில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக வடிகால் அமைத்து, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அம்பேத்கர் நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள சரஸ் (வயது 44) வீட்டின் ஒருபகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் சரசும், அவருடைய மகன்கள் மனோஜ், தனசேகர் ஆகியோர் உள்புறமாக தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் குமார் இடிந்து கிடக்கும் வீட்டை சீரமைக்க தனது சொந்த செலவில் ரூ. 5000 மதிப்பில் ஹாலோ பிளாக் கல் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    • உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
    • வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை போலீஸ் நிலையத்துக்குள் கையில் பளபளக்கும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.உடனடியாக அவரிடமிருந்த கத்தியை பறித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.உடனடியாக பொள்ளாச்சி சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த மத்தீனை தொடர்பு கொண்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.அத்துடன் அந்தியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தவரை போலீசார் சென்று பாதுகாப்புடன் உடுமலை அழைத்து வந்துள்ளனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தி.மு.க.வினர் உடுமலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.சம்பவம் குறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:-நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்யும் நோக்கத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர்.அவர்கள் சரணடைந்துள்ள ஷேக் தாவூத் என்ற இந்த நபரிடம் நகராட்சித் தலைவரின் புகைப்படத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்துள்ளார்.எனவே அந்த மர்ம நபர்கள் யார்? அவர்களை ஏவியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சித் தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'என்று கூறினர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-சரணடைந்த நபர் பெயர் ஷேக் தாவூத்(வயது 21).தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் உடுமலை வந்துள்ளனர்.இவருக்குத் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்றுள்ளார். பிறந்த குழந்தை இறந்து விட்டதால் பாதிக்கப்பட்ட இவர் ஊர் ஊராகச் சுற்றி வந்துள்ளார்.மேலும் உடுமலையிலேயே டீ மாஸ்டர்,பூ வியாபாரம் என பல வேலைகளை செய்துள்ளார்.தற்போது போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.அவர் கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று போலீசார் கூறினர்.கூலிப்படையை ஏவி உடுமலை நகராட்சித் தலைவரைக் கொல்ல சதி நடந்துள்ளதாக தகவல் பரவியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
    • இணைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் ஜஸ்டின்திரவியம், திருக்குமார், சின்னசாமி, மங்களகவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம், ஆக.6-

    75-வது சுதந்திரதினத்தையொட்டி நாடுமுழுவதும் மாணவிகள் பணிபுரிந்த செயற்கை கோள் மென்பொருள் தயாரிப்பு பணியில் திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் சாதனை படைத்தனர்.

    11-ம் வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடி தலைமையில் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சியில் நாளை பங்கேற்கின்றனர்.

    சாதனை மாணவிகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் உத்தரவுபடி நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் ஆகியோர் பள்ளிக்கு சென்று பாராட்டினர்.

    மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும் ஊக்கத்தொகை வழங்கியும் நகராட்சி தலைவர் பாராட்டினார். இதில் இணைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் ஜஸ்டின்திரவியம், திருக்குமார், சின்னசாமி, மங்களகவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×