search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறியும் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர்
    X

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறியும் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர்

    • பொதுமக்களிடம் வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
    • சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம்,வேலாயுதம்பாளையம்,பள்ளபாளையம், காளிபாளையம், சாமளாபுரம்,கருகம்பாளையம்,கள்ளப்பாளையம்,செந்தேவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.சாமளாபுரம் பேரூராட்சியில் மொத்தமாக 15 வார்டுகள் உள்ளது.

    சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவராக விநாயகாபழனிச்சாமி உள்ளார். அவர் சைக்கிளில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் பற்றியும் , பொதுமக்களிடம் வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

    பின்னர் வி.அய்யம்பாளையம் காலனி பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவரிடம் சமுதாய நலக்கூடம் அமைத்துத்தர வேண்டும் என தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதிக்கொடுத்தனர். பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் இது குறித்து பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கூறுகையில், தினந்தோறும் காலை 6 மணியளவில் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கு எந்தெந்த பகுதியில் வேலை என சரிபார்த்து அனுப்பி வைப்பேன்.

    தொடர்ந்து காலையில் தினந்தோறும் சைக்கிள் மூலமாக சுழற்சி முறையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் ஒவ்வொரு வார்டாக சென்று,மக்களை தேடி பஞ்சாயத்து நிர்வாகம் என்ற அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறேன் என்றார்.

    Next Story
    ×