என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Murali Pillai"
- வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ நாளை (15-ந்தேதி) பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் நாளை புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மந்திரி சபையில் இடம்பெறுவோர் பெயர்களை அவர் அறிவித்தார். இதில் முந்தைய மந்திரி சபையில் துணை மந்திரிகளாக இருந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது மந்திரிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோர் புதிய மந்திரி சபையிலும் தொடர்வார்கள் என லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.