search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder Threatened"

    தாராபுரத்தில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க.வினர் 2 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளவர் சந்திரசேகரன் (வயது 31). இவர் சம்பவத்தன்று இரவு அலங்கியம் சந்திப்பில் திறந்திருந்த கடைகளை மூடும்படி கூறி வந்தார்.

    அப்போது அங்கு தேர்தல் வாக்குசேகரிப்பு முடிந்த நிலையில் அங்கு நின்ற தாராபுரம் பா.ம.க. நகர செயலாளர் ஜெயேந்திரன் (27), அலங்கியம் ரோடு எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த ராம்குமார் (26) உள்ளிட்ட கட்சியினர் 6 பேர் இருந்தனர்.

    அங்கு சென்ற போலீஸ்காரர் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன், ராம்குமார் ஆகியோர் பாட்டிலை உடைத்து போலீஸ்காரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீஸ்காரர் சந்திரசேகரன் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பா.ம.க.வை சேர்ந்த ஜெயேந்திரன், ராம்குமார் ஆகியோர் மீது அரசு பணியை தடுத்தல், ஆபாச வார்த்தை பேசுதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    வாணரப்பேட்டையில் ஆயுள்தண்டனை கைதியின் மனைவி மற்றும் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையத்தில் நடந்த சகாயராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலில் உள்ளார்.

    ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரேம்குமாரை அவரது மனைவி காயத்ரி அவ்வப்போது பார்க்க செல்லும் போது பிரபல ரவுடியான நேதாஜி நகரை சேர்ந்த ஜெனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெனா அடிக்கடி காயத்ரி வீட்டுக்கு சென்று வந்தார். இதுகாயத்ரியின் மகன் வசந்துக்கு பிடிக்கவில்லை. வசந்த் தனது தாயை கண்டித்ததுடன் ஜெனாவை வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறுமாறு அறிவுறுத்தினார்.

    மகனின் அறிவுறுத்தலை ஏற்று காயத்ரி, ஜெனாவிடம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் வசந்த் மீது ஜெனா ஆத்திரம் அடைந்தார். நேற்று மாலை காயத்ரி வீட்டுக்கு சென்ற ஜெனா அங்கிருந்த வசந்த்தையும், காயத்ரியையும் தாக்கினார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதுகுறித்து காயத்ரி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஜெனாவை கைது செய்தனர். #tamilnews
    பண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவரது அண்ணன் மகன் ஹேமன் (15). அதே பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (20). முன்விரோதம் காரணமாக ஹேமனை, கவுதமன் தாக்கியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவுதமனிடம் சென்று ஏன் எனது அண்ணன் மகனை தாக்கினாய் என விஜய் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கவுதமன் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜய் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்னுபிரியா வழக்குபதிவு செய்து கவுதமனை கைது செய்தார். #tamilnews
    ×