search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslim lawyer"

    • இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
    • இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

    டாக்கா:

    வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

    இந்து மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கதேச நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் இந்து தலைவரும், இஸ்கான் துறவியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பாக வாதாடும் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டார். விசாரணையில், உயிரிழந்தவர் பயிற்சி வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கோ னி கொலை வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். #Myanmar #DeathPenalty
    யாங்கோன்:

    மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஆங் வின் சா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேர் மீதான வழக்கு யாங்கோன் வடக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    ×