என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslim woman"

    • ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது.
    • பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஃபர்ஹீன். அவரின் தாயார் ஃபர்ஹானா உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடன் பெற்றவர்களிடம் இருந்து மாத தவணையை வசூலிக்கும் பொறுப்பில் அவர் உள்ளார்.

    இந்நிலையில், சுஜாது கிராமத்தில் வசிக்கும் ஷாமா என்பவரிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க தனது நிறுவனத்தில் உடன் வேலை செய்யும் சச்சின் என்ற நபருடன் தனது மகள் ஃபர்ஹீனை அனுப்பியுள்ளார்.

    ஃபர்ஹீனும் சச்சினும் ஒரு பைக்கில் அந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 10 ஆண்கள் அவர்களை வலுக்கட்டாயாமாக தடுத்து, இருவரையும் தாக்கியுள்ளனர். குறிப்பாக ஃபர்ஹீனின் பர்தாவை கழட்ட சொல்லி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாக்குதல் சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வீடியோ ஆதாரத்தைக் கொண்டு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் ஒருவருடன் உணவுக் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    இஸ்லாமிய பெண் ஹிஜாப்புடன் இருப்பதையும் உடன் இந்து மதத்தை சேர்ந்த நபர் இருப்பதையும் கண்டு ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    நண்பரை காப்பாற்ற முயன்ற பெண், அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர், அவரை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இருப்பினும் இளைஞரை அடித்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
    • இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு குடியேறுவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    திறன்மேம்பாடு கழகத்தில் பணி செய்து வரும் அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வதோதராவில் உள்ள ஹர்னி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.

    இந்த குடியிருப்பில் மொத்தம் 462 வீடுகள் உள்ள நிலையில், இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினர்.

    மேலும் அந்த கடிதத்தில், ஹர்னி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிலோமீட்டருக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று கூட இல்லை. இப்போது இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பெண் குடியேறுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

     

    7 வருடமாக இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி குடியிருப்புவாசிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குடியிருப்புவாசிகளின் தொடர் எதிர்பால் இஸ்லாமியப் பெண் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

    ×