என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "N Korea"
- விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம்.
- குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்.
வட கொரியா அனுப்பி வரும் குப்பைகள் நிரம்பிய பலூன்களால் தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் முடங்கும் சூழல் உருவானது. தொடர்ச்சியாக குப்பைகள் அடங்கிய பலூன்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஓடுபாதைகள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளிலும் வட கொரியாவின் குப்பைகள் அடங்கிய பலூன்கள் ஏராளமாக குவிகின்றன. குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் துவங்கி வட கொரியா தென் கொரியாவிற்குள் குப்பைகள் அடங்கிய பலூன்களை அனுப்பி வருகிறது. முன்னதாக வட கொரியாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென் கொரியா சார்பில் பலூன்கள் அனுப்பப்பட்டன.
இவைகளில் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய காகிதங்கள் இடம்பெற்று இருந்தன. இதோடு எல்லை பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான இசையை தென் கொரியா ராட்சத ஒலிப்பெருக்கிகள் மூலம் இசைத்தது.
தென் கொரியாவின் பலூன் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா பலூன்களில் குப்பைகளை அனுப்ப துவங்கியது. அதன்படி தற்போது வட கொரியா அனுப்பிய பலூன்களால் தென் கொரிய விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது. அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அணு ஆயுத சோதனையை நிறுத்த ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உலக அணு ஆயுத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் முற்றிலும் நிறுத்த கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக கொரியன் தீபகற்பத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo #US
இந்நிலையில், சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பரம எதிரிகளாக இருந்து வந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என ஷாபாஸ் ஷரிப் குறிப்பிட்டுள்ளார்.
‘கொரியா போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே அமெரிக்காவும் வடகொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வந்துள்ளன. அணு ஆயுத வலிமையை காட்டி ஒருநாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதம் என்ற கொள்கையை கைவிட்டு வடகொரியாவும் அமெரிக்காவும் அமர்ந்துப் பேசி சமாதானம் செய்துகொள்ள முடியுமானால், காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நமது பிராந்தியத்தில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் கனிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு உடன்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஷாபாஸ் ஷரிப் வலியுறுத்தியுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்