என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naani"

    • 'டேஸ்ட் அட்லஸ்' உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை வெளியிட்டது.
    • இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது.

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை வெளியிட்டது.

    உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 6ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது. வட இந்திய உணவான Paratha 18 ஆவது இடத்தையும் Bhatura 26ம் இடத்தையும் பிடித்துள்ளது.

    • நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
    • கார்த்தி தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.


    தசரா - நானி
    தசரா - நானி

    இந்நிலையில் கார்த்தி, நடிகர் நானி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், நானி எல்லாம் இடங்களிலும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். இது மிக அற்புதமாகவும், சந்தோஷமாவும் இருக்கிறது. தசரா படத்திற்கு நிறைய சக்தி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    நடிகர் நானி தற்போது தசரா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படம் இன்று வெளியானது.

    இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தசரா'. இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி ரூ.38 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.


    தசரா

    தசரா

    இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி சமூக வலைத்தில் பதிவிட்டிருந்தார். அதில், என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.


    விடுதலை

    விடுதலை

    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். அதில், மிக்க நன்றி அண்ணா! என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சூரி-கீர்த்தி சுரேஷின் பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ×