என் மலர்
நீங்கள் தேடியது "Nagari Constituency"
- விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
- அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி:
பாகுபலி படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ஆந்திராவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக உள்ளார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.
இந்த நிலையில் அனுஷ்கா ஆந்திர அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்கா வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து ஜனசேனா கட்சி தலைவர்களுடன் அனுஷ்கா பேசி வருவதாகவும் தனது அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா 3-வது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
அவரை தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. நகரி தொகுதியை பொறுத்த வரையில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.
நடிகை அனுஷ்கா தமிழ் படங்களிலும் பிரபலமானவர்.
நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
அடுத்த மாதம் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார்.
அதே நேரத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார்.
இந்தநிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியலின்படி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.
முதல்-மந்திரி என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
நடப்பு சட்டசபையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மருமகன் தக்குபட்டி வெங்கடேஸ்வரராவ், புர்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு (தெலுங்குதேசம்) எதிராக இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடுகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 2 பேருக்கு மட்டும் இப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23 தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லூர் தொகுதி எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் தொகுதி எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகிய இருவருக்கும் மீண்டும் களம் காண வாய்ப்பு தரப்படவில்லை. #ParliamentElection #Roja