search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Najam Sethi"

    • இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பதவிக்காலத்தில் அதிக பணத்தை செலவழித்ததாக ஆடிட்டிங் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிடில் அவதூறு வழக்கு பாயும் என நஜய் சேதி குறிப்பிட்டுள்ளார். #PCB #NajamSethi
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. இவரது காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தார். இந்தியாவிற்கு வந்து பிசிசிஐ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இருநாடுகளுக்கு இடையிலான தொடரை இலங்கையில் நடத்த முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் இந்தியா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்காததால் வேறு வழியின்றி இந்தியா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஐசிசி-யில் முறையிட்டார்.

    இந்நிலையில்தான் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாகிஸ்தானில் அமைந்தது. இதனால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எஹ்சன் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆடிட்டிங் குழு, சம்பளம் தொடர்பாக சுமார் 7 கோடி ரூபாய் செலவழித்துவிட்டார் நஜம் சேதி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஜம் சேதி, மன்னிப்பு கேட்காவிடில் கிரிக்கெட் வாரியம் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை குறிவைக்கிறார்கள். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. என்னுடைய வக்கீல் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருக்கு என்னை அவமானம் செய்ய முயன்றதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக எஹ்ஸான் மாணி எந்தவித போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PCB #EhsanMani
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் நஜம் சேதி. சமீபத்தில் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமரானார். இதனைத் தொடர்ந்து நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் எஹ்ஸான் மாணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டைய கணக்கரான (CA) எஹ்ஸான் மாணி 2003 முதல் 2006 வரை ஐசிசியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

    முன்னதாக, பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த 2009-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், அன்றுமுதல் பாதுகாப்பு கருதி அந்நாட்டு மண்ணில் கிரிக்கெட் விளையாட இதுவரை எந்த அணியும் முன்வராமல் பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டுள்ளது.

    பின்னர், இந்த துரதிஷ்டமான சூழலில் இருந்து அந்நாடு மீண்டு வர பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டவர் நஜம் சேதி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்து 2020-ம் ஆண்டு வரை மீண்டும் தலைவராக தேர்வு செய்தனர்.

    இதற்கு காரணம், இவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது, டி20 போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்தது மற்றும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் அறிமுகம் என பல சிறப்புக்களை பாகிஸ்தான் பெற்றதால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் காபந்து முதல்வராக 2013-ம் ஆண்டு இவர் பதவிவகித்தபோது நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி நூலிழையில் ஆட்சியை கைப்பற்றியது.

    அந்த தேர்தலில் 35 தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதற்கு நஜம் சேதி துணையாக இருந்ததாகவும் இம்ரான் கான் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவற்றை மறுத்த நஜிம் சேதி, இம்ரான் கான் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியதாக அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



    மேலும், பாகிஸ்தானின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேத், அந்நாட்டின் அதிகாரத்தை இம்ரான் கான் கைப்பற்ற அவருக்கு ராணுவம் துணை புரிவதாக எழுதிய கட்டுரைகள் இம்ரான் கான் ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். #ImranKhan #PCB
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8 முதல் 10 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று நஜம் சேதி கூறியுள்ளார். #PCB #PSL
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ டி20 தொடரை நடத்தி வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே டி20 தொடரில் மட்டும் விளையாடியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற சீசனின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் மற்றும் இறுதிப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. மேலும் உலக லெவன் அணிக்கெதிராக டி20 தொடரையும் பாகிஸ்தானில் நடத்தியதால் மற்ற அணிகளையும் பாகிஸ்தான் அழைக்க திட்டமிட்டுள்ளது.



    நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அதுபற்றி யோசித்து வருவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இந்நிலையில் அடுத்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்போது 8 முதல் 10 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் என் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி கூறியுள்ளார். இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சர்வதேச போட்டிகளை காண வாய்ப்புள்ளது.
    ×