என் மலர்
முகப்பு » nan ready
நீங்கள் தேடியது "nan ready"
- லியோ படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
- லியோ படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லியோ படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் "நா ரெடி" என்ற பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி, "நா ரெடி தான்" பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
×
X