என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nana Patole"
- மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது.
- இத்தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் உள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், சகோலி சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நானா படோல் பா.ஜ.க. வேட்பாளரை 208 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதேபோல், மால்கான் மத்தி தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர் 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் காலை தொண்டர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியானது.
- தொண்டர் காலை சுத்தம் செய்யவில்லை. தண்ணீர் மட்டுமே ஊற்றினார் என நானோ படோலே விளக்கம்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் காலில் ஒட்டிய சேற்றை தொண்டர் ஒருவர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
அந்த வீடியோவில் காங்கிரஸ் தலைவர் நானோ படோலே காரில் இருந்து கொண்டு காலை நீட்டுகிறார். காங்கிரஸ் கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு வந்து காலில் இருந்து சேற்றை சுத்தம் செய்கிறார்.
இது தொடர்பாக பாஜக தலைவர் ஷேசாத் பூனவல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் "மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலேயின் காலை காங்கிரஸ் கட்சி தொண்டர் சுத்தம் செய்கிறார். இவர்கள் தங்களை ராஜா மற்றும் ராணியாக நினைத்துக் கொண்டு வாக்காளர்களையும், தொண்டர்களையும் அடிமைகள் போல் நடத்துகிறார்கள்.
அதிகாரத்தில் இல்லாதபோதே மக்களை இப்படி செய்கிறார்கள் என்றால் நினைத்து பாருங்கள். தவறுதலாக கூட அதிகாரத்திற்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள். நானோ படோலே மற்றும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நானோ படோலே கூறுகையில் "மழைக் காரணமாக தனது காலில் சேறு ஒட்டிக்கொண்டது. ஆகவே, நான் தண்ணீர் கேட்டேன். கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு வந்தார். அவர் காலில் ஊற்ற நான் சுத்தம் செய்தேன்" என்றார்.
- நானா படோலின் கார் பாந்த்ரா அருகே பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது.
- பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது.
மும்பை:
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார் நானா படோல்.
இந்நிலையில், நானா படோலின் கார் பாந்த்ரா நகருக்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது தெரிய வந்தது.
இந்த விபத்தில் நானா படோலே அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், இந்த விபத்தில் அவரது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவரை கொல்ல முயற்சியா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
- மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது.
மும்பை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது.
அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவானும் தேசியவாத காங்கிரசை விமர்சித்து இருந்தார்.
இதனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று கூறியதாவது:-
மகா விகாஸ் அகாடி கூட்டணி பலமாக உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு குறித்து ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்ப தேவையில்லை.
மகா விகாஸ் அகாடி தலைவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திக்கிறார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது. கூட்டணி பிரபலமடைந்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால் தான் மகா விகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவுகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. எனவே தான் நாக்பூரில் நடத்த உள்ள பொதுகூட்டத்தை தடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.
சத்ரபதி சாம்பாஜி நகரில் மகா விகாஸ் அகாடி நடத்திய கூட்டத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். ஏப்ரல் 16-ந் தேதி அன்று திட்டமிட்டபடி நாக்பூரில் பொதுகூட்டம் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து அமராவதி, புனே, கோலாப்பூர், நாசிக் மற்றும் மும்பையில் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
- மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர்.
நாந்தெட் :
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி ஆட்சி, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் அதிருப்தியால் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேரின் உதவியுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் நாந்தெட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஏன் இன்னும் மந்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை? ஏன் என்றால் அவ்வாறு செய்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஊழல் மற்றும் அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். என்ன நடக்கிறது எந்த மராட்டியத்தில்?.
முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவர் உள்பட தற்போது பதவியில் உள்ள பல மந்திரிகளும் மகா விகாஸ் அகாடி அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதாவில் தலா 9 மந்திரிகள் உள்ளனர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக 43 மந்திரிகள் வரை இருக்கலாம்.
மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளையடிப்பதுடன், வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்த முயற்சி செய்வதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்தி வைத்ததன் மூலம் மராட்டிய அரசுக்கு மத்திய அரசு முதல் அடி கொடுத்தது.
இந்தநிலையில் மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்க, எரிபொருள் மீது மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் செஸ் வரி விதித்தது.
இதன்மூலம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வரை மாநில அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் தட்டிபறிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்க பல்வேறு சட்ட வழிமுறைகள் மற்றும் நிர்வாக ரீதியான ஓட்டைகளை பயன்படுத்தி உள்ளது.
இதுபோன்ற செஸ் வரி இல்லை என்றால் மராட்டிய அரசின் கருவூலத்தில் அந்த பணம் சேர்க்கப்பட்டு இருக்கும். இது பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும் பயன்படுத்தி இருக்கலாம்.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
மாநிலத்தில் எரிபொருள் மீதான விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு ஏற்கனவே மதிப்பு கூட்டு வரியை(வாட்) குறைத்துள்ளது. முதல்-மந்திரி அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வருவதால் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.
விரைவில் அவரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் நானா படோலே நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது பாஜக மூத்த தலைவரான மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சொந்த தொகுதியாகும். நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரி இந்த தடவையும் அந்த தொகுதியிலேயே போட்டியிட உள்ளார். இதனால் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்கு பலத்த போட்டியாக நானா படோலே விளங்குவார் என்று கருதப்படுகிறது.
நானா படோலே நாக்பூரில் போட்டியிடுவது குறித்து நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
இது நல்லது தான். எந்த வேட்பாளரும் யாரையும் எதிர்த்து போட்டியிட உரிமை உள்ளது. எந்த ஒரு வேட்பாளரையும் பற்றி விமர்சிப்பதிலும், குறைகூறுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.
நான் மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை எடுத்துக்கூறி ஓட்டுகேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவில் இருந்தபோது ஒருமுறை நானா படோலே, நிதின் கட்காரியிடம் ஆசி பெற்றார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்காரி, “ஒருவர் கட்சியில் இருந்து விலகியதால் நான் அவருக்கு வழங்கிய ஆசிர்வாதம் விலகி போய்விடாது.
நான் அரசியலில் ஒருபோதும் பகைமை உணர்வை கடைப்பிடிப்பதில்லை. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். #NanaPatole #NitinGadkari
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்