search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nandanam"

    நந்தனத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் தனது நண்பர் தமீம் அன்சாரியை நேற்று இரவு 10.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

    நந்தனம் தேவர் சிலை அருகில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவியது.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த பணப் பையையும் வழிப்பறி கும்பல் பறித்தது. ஆனால் ஜாபர் சாதிக்கும், தமீம் அன்சாரியும் அவர்களோடு போராடினார்கள். இதையடுத்து ஹெல் மெட்டால் இருவரையும் தாக்கிய கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

    இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கண் காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.4 லட்சம் பணத்துக்கு போலீசார் கணக்கும் கேட்டு உள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ×