என் மலர்
முகப்பு » Nanjarayan lake
நீங்கள் தேடியது "Nanjarayan lake"
- திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிப்பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும்.
- வரைவு அறிவிப்பாணையை அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அனுப்பியுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி வனத்துறை அமைச்சர், 'திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிப்பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.7.5 கோடி தொகையை அனுமதிக்கும்' என்று அறிவித்தார்.
இதற்கான வரைவு அறிவிப்பாணையை அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அனுப்பியுள்ளார். அதில், நஞ்சராயன் ஏரி பகுதியைச் சேர்ந்த ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு தாலுகா ஆகிய இடங்களில் உள்ள 125.86.5 ஹெக்டேர் இடத்தை நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்று அறிவிக்கும்படி கோரியுள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, அதற்கான அறிவிப்பாணையை வெளியிட முடிவு செய்துள்ளது. அந்த அறிவிப்பாணை தமிழக அரசிதழில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×
X