search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naseem Shah"

    • சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
    • இந்த போட்டியில் நசீம் ஷா அவரது கடைசி ஓவரை வீசும் போது காயமடைந்தார்.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஹரிஸ் ரவூப் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். காயம் காரணமாக அவர் மீண்டும் களத்தில் இரங்கவில்லை. மற்றொரு வீரரான நசீம் ஷா அவரது கடைசி ஓவரை வீசும் போது காயமடைந்தார். இதனால் உடனடியாக வெளியேறினார். பேட்டிங்கிலும் கூட இவர்கள் இரண்டு பேரும் வரவில்லை.

    இந்நிலையில் மீதமுள்ள ஆசிய கோப்பை தொடரில் இருந்து நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் விலகியுள்ளனர். அவருக்கு பதிலாக ஜமான் கான் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • பாகிஸ்தான் அணி 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவும் முடிந்து விட்டது.
    • நசீம் ஷா வீசிய 3.5 ஓவரில் ரோகித் சர்மாவுக்கு ரிஸ்வானால் ரிவ்யூ கேட்கப்பட்டது.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

    இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 121-ஐ எட்டிய போது ரோகித் சர்மா (56 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஷதப்கானின் பந்துவீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் சுப்மன் கில்லும் (58 ரன், 52 பந்து, 10 பவுண்டரி) வெளியேறினார். அவர் அப்ரிடி வீசிய பந்தை அடித்த போது 'கவர்' திசையில் நின்ற ஆஹா சல்மானிடம் சிக்கினார்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (ரிசர்வ்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன்படி பாதியில் நின்று போன இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று தொடர்ந்து நடைபெற்றது. கேஎல் ராகுலும் விராட் கோலியும் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ஓவருக்கு முன்னதாகவே 2 ரிவ்யூவும் முடிந்து விட்டது. இதற்க்கு முக்கிய காரணம் கீப்பர் ரிஸ்வான். இவரால் தான் 2 ரிவ்யூ-வும் பறிபோனது.

    நசீம் ஷா வீசிய 3.5 ஓவரில் ரோகித் சர்மாவுக்கு ரிஸ்வானால் ரிவ்யூ கேட்கப்பட்டது. அது 3-வது நடுவரால் நிராகரிக்கப்பட்டது. இதனை போன்று 27.6 ஓவரில் விராட் கோலிக்கு அவுட்டுக்கான அப்பில் கேட்கப்பட்டது. இதனை கீப்பராக நின்ற ரிஸ்வான் ரீவ்யூ எடுக்குமாறு கேப்டனை கேட்டுக் கொண்டார். இதனால் ரிவ்யூ கேட்கப்பட்டது.

    ஆனால் 3-வது நடுவர் அதனை நாட் அவுட் கொடுத்தார். மீதமிருந்த ஒரு ரிவ்யூ-வும் பறிபோனது. இதனால் நெட்டிசன்கள் ரிஸ்வானை ஆர்வக் கோளாறு என திட்டி வருகின்றனர்.

    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நசீம் ஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் மட்டும் விளையாடினார். இதற்கிடையே நசீம் ஷா நிமோனியா காய்ச்சலால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நசீம் ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×