என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National Herald"
- வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள்
- அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்
அமலாக்கத்துறை சம்மன்
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சக்கர வியூகம்
தற்போது மீண்டும் ராகுல் காந்தி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகக் கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மக்களவையில் மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளதாகத் தான் பேசியது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குக் காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசி யேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பங்குகளை பெற்றுக் கொண்டதாக மனுவில் கூறினார். இது தொடர்பாக வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடந்த காலங்களில் சம்மன் அனுப்பி பலமணிநேர விசாரணையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
- முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.
எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
- சிறிது நேரத்தில் ராகுல்காந்தி புறப்பட்டு சென்ற நிலையில் பிரியங்கா காந்தி அங்கேயே காத்து இருந்தார்.
- ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கினார். இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசி யேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பங்குகளை பெற்றுக் கொண்டதாக மனுவில் கூறினார். இது தொடர்பாக வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது.
பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது.
ராகுல்காந்தி கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் மொத்தம் 53 மணி நேரம் விசாரணை நடந்தது.
சோனியாகாந்தி கடந்த மாதம் 8-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பிய போது அவர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டதால் அவகாசம் அளிக்க வேண் டும் என்று கோரி இருந்தார். இதை ஏற்று கொண்ட அமலாக்கத்துறை கடந்த 26-ந்தேதி ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு புதிய சம்மனை அனுப்பியது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சோனியாகாந்தி கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டு 28 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார்.
சோனியாகாந்தி 25-ந்தேதி (நேற்று) மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. பின்னர் ஆஜராகுவது ஒரு நாள் (26-ந்தேதி) தள்ளி வைக்கப்பட்டது.
சோனியாகாந்தி இன்று ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அதன்படி இன்று சோனியா காந்தி 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவர் காலை 11 மணிக்கு காரில் வந்தார். அவருடன் மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.
பின்னர் சோனியாகாந்தி மட்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றார். சிறிது நேரத்தில் ராகுல்காந்தி புறப்பட்டு சென்ற நிலையில் பிரியங்கா காந்தி அங்கேயே காத்து இருந்தார்.
சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரால்டு பங்குகள் மாற்றம் தொடர்பான கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டனர்.
சோனியாகாந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி அமலாக்கதுறை முன்பு முதல் நாளில் ஆஜரானதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே போல் கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானதையடுத்து அவரது இல்லம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் மீதும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் அனில் அம்பானி சார்பில் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக தான் இது போன்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே எங்கள் தரப்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. எனினும் அறிக்கை யார் பெயரில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.
அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது.
மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.
பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெருமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.
இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.
2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.
காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது.
அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெருமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.
தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல் AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.
இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.
ரூ. 2000 கோடி பெருமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் ரூ. 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.
கடந்த 2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனைதொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் சார்பில் வருமான வரித்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின்மீது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் மற்றும் வருமான வரித்துறை தரப்பு வக்கீல்கள் வாதத்துக்காக டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #NationalHerald #SoniaITcase #RahulITcase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்