search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Sports Tournament"

    • தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது.
    • வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.

    கோவா:

    37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடந்தது. இதில் தமிழ்நாடு 14 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தமிழக தடகள அணி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்றது. வித்யா மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.

    தமிழக அணி 114.5 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. சர்வீசஸ் 117 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. தமிழக அணி 2.5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

    • தேசிய விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
    • இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியீடு.

    கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது.
    • பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது.

    நேற்றைய போட்டியில் தமிழக அணி 5 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 97-89 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது.

    கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் தோற்றது. இதன் மூலம் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிகரன்-நர்த்தனா ஜோடி வெண்கலம் வென்றது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
    • ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் பெற்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 23.06 வினாடியில் கடந்தார்.

    இதில் பங்கேற்ற மற்ற தமிழக வீராங்கனைகளான சந்திரலேகா 5-வது இடத்தையும், கிரிதரணி 8-வது இடத்தையும் பிடித்தனர்.

    இதே போல 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை வித்யாவும் தங்கம் வென்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 56.57 வினாடியில் கடந்தார். மற்ற தமிழக வீராங்கனைகளான திவ்யா 5-வது இடத்தையும், சுமித்ரா 6-வது இடத்தையும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சுரேந்தர் ஜெயக்குமார் வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.

    தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தடகளத்தில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கம் கிடைத்துள்ளது.

    டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் கிடைத்தது. மனிஷ் சுரேஷ் குமார், சாய் சமிதா ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.

    நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் தொடரில் பவன் குமார் இந்த பதக்கத்தை பெற்றார். ஸ்குவாஷ் பந்தயத்தில் ஹரீந்தர் பால்சிங் சிந்து வெண்கல பதக்கம் பெற்றுக் கொடுத்தார்.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணிக்கு 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 46 பதக்கம் கிடைத்தது. பதக்க பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. 

    • 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீராங்கனைகள் இந்த சாதனையை முறியடித்தனர்.
    • பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியிலும் தங்கம் கிடைத்தது.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    3-வது நாள் போட்டி முடிவில் தமிழ்நாடு 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் ஆக மொத்தம் 25 பதக்கம் பெற்று இருந்தது. 4-வது நாளான நேற்று தமிழகத்துக்கு மேலும் 8 பதக்கம் கிடைத்தது. இதில் 4 தங்கப்பதக்கம் அடங்கும்.

    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஆட்டத்தில் தங்கம் கிடைத்தது. திவ்யா, வித்யா, ஒலிம்பியன் ஸ்டெபி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 35.32 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்தது.

    இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு கேரளா 3 நிமிடம் 35.94 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீராங்கனைகள் இந்த சாதனையை முறியடித்தனர்.

    பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியிலும் தங்கம் கிடைத்தது. 76 கிலோ பிரிவில் ஆரோக்யா அலிஷா தங்கம் வென்று சாதித்தார். பளு தூக்குதலில் தமிழகத்துக்கு கிடைத்த 2-வது தங்கமாகும்.

    ரோலெர்ஸ்கெட்டிங்கில் ஆரத்தி கஸ்தூரிராஜ், கார்த்திகா, மீனாலோஹினி, கோபிகா ஆகியோர் அடங்கிய பெண்கள் ரிலே அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

    ஆனந்தகுமார், சுவிஸ், செல்வக்குமார், இர்பான் ஆகியோர் அடங்கிய தமிழக ஆண்கள் அணி இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.

    நீச்சல் பந்தயத்தில் இரண்டு பதக்கம் கிடைத்தது. பவன்குப்தா, சத்ய சாய்கிருஷ்ணன், பெனடிக்ட் ரோகித், ஆதித்யா ஆகியோர் அடங்கிய தமிழக அணி 4x10 மீட்டர் பிரீஸ்டைலில் வெள்ளி பதக்கமும், மனன்யா, அத்விகா, பிரமிதா, சக்தி ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணி 4x100 மீட்டர் பிரீஸ்டைலில் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    தடகளத்தில் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சதீஷ்குமார், மோகன்குமார், சரண், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய அணி வெண்கல பதக்கம் பெற்றது.

    தேசிய விளையாட்டுப் போட்டியின் பதக்க பட்டியலில் தமிழக அணி 4-வது இடத்தில் இருக்கிறது. 12 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆக மொத்தம் 33 பதக்கம் பெற்றுள்ளது. சர்வீசஸ் 23 தங்கம் உள்பட 51 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது. 

    ×