என் மலர்
நீங்கள் தேடியது "National Stock Exchange"
- அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது
- 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 சரிந்து, 21,997 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் இன்று ஒரே நாளில் ₹90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் 5.5% சரிவையும், அதானி போர்ட்ஸ் 5.3% சரிவையும் கண்டுள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ. 15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.
- சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது.
- ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன.
வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 28) மும்பை பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 22,300-க்கு கீழ் சென்றதால் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன. இந்த தொடர் சரிவு இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.