search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navalny"

    • உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.
    • உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. இதற்கிடையே உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

    ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும். நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷியா தயாராக இருக்கிறது என்று புதின் தெரிவித்தார்.


    இந்த நிலையில் புதினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, புதின் தெரிவித்துள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது ராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார். அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும். இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது. ஹிட்லர் செய்த அதே விஷயத்தை புதின் செய்கிறார். இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது என்றார்.

    இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறும் போது, உக்ரைன் மீதான ரஷியாவின் அநியாயமான படையெடுப்பால் அவர்களது நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.

    போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பினால் உக்ரேனிய இறையாண்மையை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம். அமைதியைக் கொண்டுவர உக்ரைன் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட அவர் எந்த நிலையிலும் இல்லை என்றார்.

    • ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார்.
    • தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார். அவர் 88 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக சிறையில் மரணமடைந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா, அதிபர் புதினுக்கு எதிராக தனது கணவரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் புதின் பெற்ற வெற்றி தொடர்பாக யூலியா நவல்னயா கூறியதாவது:

    தேர்தல் முடிவுகள் ஒரு பொருட்டல்ல. உலகில் யாரும் புதினை முறையான அதிபராக அங்கீகரிக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவருடன் உலக தலைவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு மேசையில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஏனென்றால் அவர் ரஷியாவின் முறையான அதிபர் அல்ல. புதின் எங்கள் அதிபர் அல்ல என்பதை நாங்கள் மற்றவர்களுக்கும் நிரூபித்துள்ளோம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் புதின் ஆட்சியை எதிர்த்துப் போராட மக்களை வலியுறுத்துகிறேன்.

    நமக்கு அமைதியான, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான ரஷியா தேவை. நாம் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும். இதை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.

    • உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
    • நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

    இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.


    உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.

    இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

    நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    ×