search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navi mumbai"

    • சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தைத் தர மறுத்த முதலாளியை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை நகரின் கலம்போலி பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் [ஜூன் 14] வெள்ளிக்கிழமையன்று தனது சம்பளமாக 1,250 ரூபாயை தரும்படி அன்சாரியிடம் கேட்டுள்ளார்.

     

     

    ஆனால் சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி அன்சாரியை குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த அன்சாரியின் நண்பரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியான தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மும்பையில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் ஏற்படும் விபத்துக்களை கண்டித்து நவநிர்மாண் சேனா கட்சியினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து உடைத்தனர். #MumbaiPotholeDeaths
    மும்பை:

    இந்தியாவின் வணிகத்தலைநகரான மும்பையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் முறையான பராமரிப்புகள் இன்றி சமீபகாலங்களில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், விபத்துக்களை தவிர்க்கவும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இருப்பினும் மாநில அரசு துரித நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் கண்டித்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த சிலர் நவி மும்பையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #MumbaiPotholeDeaths

    மகனின் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெற்று பெண் வைத்திருந்த ரூ.9.97 லட்சம் ரூபாயை, வங்கி மானேஜர் பேசுவதாக போனில் கூறி ஏ.டி.எம் கார்டு விபரங்களை வாங்கி 28 முறை சிறிது சிறிதாக மர்ம நபர் சுருட்டியுள்ளான்.
    மும்பை:

    வங்கிக்கணக்கு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட விபரங்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது என வங்கிகள் காட்டுகத்தலாக கூறி வருகிறது. போனில் மானேஜரோ அல்லது வங்கி அதிகாரிகளோ பேச மாட்டார்கள் எனவும் வங்கிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. அதையும், மீறி பலர் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்துள்ளனர். 

    மும்பையில் உள்ள நேருல் செக்டார் பகுதியில் வசித்து வரும் தஸ்னிம் மோதக் என்பவர், தனது மகனின் படிப்புக்காக வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த ரூபாயை தனது வங்கிக்கணக்கில் அவர் சேமித்து வைத்துள்ளார். கடந்த மாதம் வங்கி மானேஜர் பேசுவதாக போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, உங்களது ஏடிஎம் கார்டு செயலிழந்து விட்டது. மீண்டும் அதனை சரிசெய்ய பாஸ்வேர்டு, கார்டு எண் ஆகியவற்றை கூறவும் என பேசி வாங்கியுள்ளார்.

    கார்டு விபரங்களை பெற்றாலும், அந்த ஆசாமியால் பணத்தை சுருட்ட முடியவில்லை. ஒன் டைம் பாஸ்வேர்டு தஸ்னிம் மோதக்கின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வரும் என்பதால், அந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியவில்லை.

    இதனை அடுத்து, மோதக்கை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி ஒன் டைம் பாஸ்வேர்டை பெற்றுள்ளார். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 28 தடவை இப்படி போனில் பேசி ஒன் டைம் பாஸ்வேர்டை மோதக்கிடம் இருந்து பெற்று கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9.97 லட்சம் பணத்தை அந்த ஆசாமி சுருட்டியுள்ளார்.

    ஒவ்வொரு முறையும் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் போதும் மோதக்கின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. ஆனால், அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. வங்கிக்கு சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்யும் போது தான் கணக்கில் இருந்த ரூபாய் கரைந்து போனது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனை அடுத்து, போலீசுக்கு சென்று மோதக் புகார் அளிக்க, போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகின்றனர். 28 முறை பணம் போயுள்ளதாக குறுந்தகவல் வந்தும் மோதக் ஏன் சந்தேகம் அடையாமல், ஒவ்வொரு முறையும் குற்றவாளிக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை கூறியுள்ளது ஏன்? என குழப்பமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×