search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navratri"

    • நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது.
    • நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது.

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் ராவணனாக நடித்த 2 நடிகர்கள் உண்மையிலேயே சண்டையிட்டு கொண்ட நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராம்லீலே நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட தொடங்குகின்றனர். அப்போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

    அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகிறார். அதனால் கோபமடைந்த ராமன் ராவணனை தாக்க வருகிறார். அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகிறார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

    இந்துக்களின் புனிதப் பண்டிகையான நவராத்திரி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய இரவு ராவணன் பொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அதன்பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் செங்கோட்டையில் நடக்கும் நிகழ்வுக்கு வருகை தந்தனர். இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

    இதுபோல மகாராஷ்டிரா, பீகார், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் அரசியல் தலைவர்கள் தலைமையில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    • துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக நடந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன
    • கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது பலநாள் திட்டமிட்ட செயலாக தெரிகிறது

    வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துமதத்தைப் பின்பற்றும் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. தற்போது நவராத்திரி விழா கொண்டாட்டங்களை ஒட்டி அந்த தாக்குதல்கள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

    நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக நடந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த இடையூறு சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

     

    குறிப்பாக தலைநகர் டாக்காவில் உள்ள தண்டிபஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை மண்டபம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றும், இதில் 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் பிரதமர் மோடி சார்பில் வங்கதேசத்தின் சக்திரா நகரில் உள்ள ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் அம்மனுக்கு வழங்கப்பட்ட கிரீடம் திருடுபோன சம்பவமும் நிகழ்ந்தது. இந்த தொடர் சம்பவங்களைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது. கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது பலநாள் திட்டமிட்ட செயலாக தெரிகிறது. இதை நாங்கள் கவனித்து வருகிறோம். புனிதப் பண்டிகை காலத்தில் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரினதும் அவர்களது வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்
    • அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த ராம்லீலா நாடகத்தை நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததாகத் தலித் நபரை போலீசார்  தாக்கியுள்ளனர். உ.பி. மாநிலம் காஸ்கஞ்ச்[Kasganj] மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமாயண புராணக் கதைகளைக் கூறும் ராம்லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது.

    இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த சந்த் [Chand] [ 48 வயது நபர்] வந்துள்ளார். அங்கு காலியாக கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து ராமாயண நாடகத்தைப் பார்த்ததால் கொதிப்படைந்த சாதிய வக்கிரம் கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் சிலரை ஏவி சந்த் -ஐ அடிக்க வைத்துள்ளனர். அந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிதித்தும் சரமாரியாக அடித்தும் உள்ளனர்.

    இதனால் சந்த் அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த் தனது மனைவி ராம் ரதியிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

    திங்கள்கிழமை காலை எழுந்து பார்க்கும்போது தனது கணவர் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை மனைவி ராம் ரதி பார்த்துள்ளார்.  இந்நிலையில் இதுதொடர்பாக மனைவி ராம் ரதி போலீசில் மேற்கூறியபடி நடத்தவை குறித்து புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி, ராம்லீலா நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வந்த சந்த் மேடை மீது ஏறி அமர்ந்துள்ளார்.அவரை அப்புறப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். எனவே அவரை போலீஸ் மேடையில் இருந்து இறக்கியுள்ளது. அதன்பின் அவர் பத்திரமாக வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் காலையில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். சந்த் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை விவசாய வேலைகள் செய்து காப்பாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
    • சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதியுள்ளனர்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவனும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவனும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகத் தெரிகிறது.

    சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவி கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.

    • ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
    • மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் ராமர் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் விஸ்வகர்மா நகரில் ஷாதரா [Shahdara] பகுதியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார். பின்னர் எழுந்து மேடையில் இரண்டு அடி முன்னே நகர்ந்த அவர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்தார் சரிந்து விழுந்தார்.

    உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராம்லீலா என்பது புராண கதையான ராமாயணத்தை மையப்படுத்தி அரங்கேற்றமாகும் மேடை நாடகமாகும். 

    • உச்ச நீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
    • இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம்

    நவராத்திரி தொடங்கியதால் உச்ச நீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நவராத்திரி பண்டிகையை ஒட்டி காலம் காலமாக விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். வழக்கமாக, 9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்நடைமுறையைப் பின்பற்றுவது தவறான முன்னுதாரணம் என அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

    • உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்.
    • பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடன கொண்டாட்டத்தில் அனுமதிக்கும் முன் இந்துக்களுக்கு கோமியம் கொடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்களை வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கோமியம் குடிக்க செய்யும் முறை "ஆச்மான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை அறிவித்த பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது, "சனாதன கலாச்சாரத்தில் ஆச்மன் நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. இதனால் அமைப்பாளர்களிடம் கர்பா பந்தல் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் பக்தர்களுக்கு கோமியம் கொடுக்க அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

    மேலும், "ஆதார் கார்டை எடிட் செய்யலாம். எனினும், ஒருவர் இந்து என்றால், அவர் கர்பா நடன பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள். உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து பாஜக தலைவர்கள் மௌனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.

    "கோமியம் ஆச்சர்ய கோரிக்கையை எழுப்புவதன் மூலம் பா.ஜ.க. பிளவுப்படுத்தும் அரசியல் செய்வதற்கு புதிய தந்திரமாக கையில் எடுத்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு கோமியத்தை உறிஞ்சி சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறை நாணயங்களையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • மாரியம்மன் கோவிலில் நவராத்திரி
    • ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது

    முசிறி

    முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன . மயிலாடுதுறை நாத பிரம்மம் கௌரி ஆறுமுகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி கணேசன், வக்கீல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சர்வாலய அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரைராயப்பன், ஆலோசகர் எடையூர் மணிமாறன், தமிழ் பால் சிவக்குமார், ராகவா ஜுவல்லர்ஸ் பாலாஜி,பாபு (எ) குமரவேல், கோவில் ஊழியர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் ஓம் சிவாலய நாட்டிய வித்யாலயம் குரு ஸ்ரீ நடன கலையரசன் காரக் கோட்டை மதியழகன் நட்டுவனர் குழுவினர் 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு க்களித்தனர். அக்டோபர் 24 வரை தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழு மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

    ×