search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxals Killed"

    • சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் கான்சேர் மாவட்டம் கோயாலி பேடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

    இதில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் 2 நக்சலைட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Chhattisgarh #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டம் கொண்டராஸ் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய தேடுதல் வேட்டையில், மாவட்ட ரிசர்வ் படையின் பெண் கமாண்டோக்களும் இடம்பெற்றிருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா தெரிவித்தார். இந்த கமாண்டோபடையில், சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டுகள், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளின் மனைவிகள் என 30 பெண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார். #Chhattisgarh #NaxalsKilled
    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.

    இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ஒடிசா மாநிலத்தின் மால்கங்கிரி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #NaxalsKilled
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் போலீசாரும் ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மாவோயிஸ்டுகள் குறித்த தகவல் கிடைத்தால், அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மாவோயிஸ்டுகளை அழித்து வருகின்றனர்.

    அவ்வகையில் மால்கங்கிரி மாவட்டம் கலிமேடா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #NaxalsKilled
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அவ்வகையில், தண்டேவாடா-பிஜப்பூர் எல்லையில் உள்ள டைம்னார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இன்று காலை ரோந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிற்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் சில மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



    அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ×