என் மலர்
நீங்கள் தேடியது "NCB"
- ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜாபர் சாதிக், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பது விசாரணையில் அம்பலம்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாபர் சாதிக், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை திரைப்படம் எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜாபர் சாதிக்குடன் இருந்த திரைப்படத் துறையை சார்ந்த பிரபலங்களின் விவரங்களும் கிடைத்துள்ளதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை என்.சி.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்த பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
- குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.
இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.
- 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன.
குஜராத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, 700 கிலோவுக்கும் அதிகமான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "போதையில்லா பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பின்பற்றி, இன்று நமது ஏஜென்சிகள் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, குஜராத்தில் சுமார் 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

உளவுத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சாகர் மந்தன் 4 என்ற பெயரில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று கடற்படையால் அடையாளம் காணப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டது.
அதன்பிறகு அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 700 கிலோ மெத்தாம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு, கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
- 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
- இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத்தான்.
இந்தியாவில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கியுள்ளது குஜராத் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்த 64 நபர்களுக்கு காவல்துறையினர் மூலம் தலா 51,202 ரூபாயும் 169 பேருக்கு உள்துறைத் துறை மூலம் தலா 6,36,86,664 ரூபாயும் 737 பேருக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (NCB) குழுவின் மூலம் தலா 5,13,40,680 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்குகளில் அலுவலக பணிகளில் உதவியாக இருக்கும் தனிநபருக்கு ஒரு பறிமுதலுக்கு ரூ.2,500 பரிசு வழங்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20% பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள 87,607 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2,500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குப்ராவா மாவட்டத்திலிருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாகவும், டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். #NCB #HeroinSeized