என் மலர்
நீங்கள் தேடியது "Neelankarai"
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரை, கிழக்கு கடற் கடை சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கன்னியா குமரியை சேர்ந்த அந்தோணி (வயது27) என்பவர் விடுதியில் தங்கி ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பள்ளி நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட மோதலில் அந்தோணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடக்கிறது. ஆசிரியர் தற்கொலையை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை நீலாங்கரை, சோழ மண்டல தேவி நகர், முதல் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் அக்கரை சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவருடைய பெயர் நந்த குமார் என்பதும் நீலாங்கரையைச் சேர்ந்த இவன் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி அருள் பிரியா(24). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இதனால் பெற்றோர் நகை போடவில்லை. இதனால் மாமியார் அநாகரிகமாக பேசினார். இதனால் வேதனை அடைந்த அருள் பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமியார் கொடுமையால் மகள் அருள் பிரியா தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்
நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரிடம் விசாரணை நடத்தினர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.