என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nehra"
- விராட், ரோகித்துக்கு ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
- இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை.
கொழும்பு:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால் கம்பீரின் முடிவால் விராட் மற்றும் ரோகித் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்ததாக 2 - 3 மாதங்கள் கழித்து தான் விளையாட உள்ளது. இது நமக்கு அரிதானது. எனவே விராட், ரோகித் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதால் அனுபவ வீரர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்பது தெரிகிறது.
ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப் பற்றி கம்பீர் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. விராட், ரோகித்திடம் சமமான உரிமையை பெறுவதற்கு கம்பீர் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அடுத்த தொடரில் விராட், ரோகித்தை விளையாட வைத்து விட்டு கம்பீர் இத்தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது இத்தொடரின் ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான மேட்ச் வின்னர். அவரை உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நீங்கள் பார்த்தால் ஷிகர் தவானை தவிர முதல் 7 வீரர்களில் இடது கை பேட்ஸ்மேன் யாரும் இல்லை. அணியில் இடது, வலது கை பேட்ஸ்மேன்கள் இணைந்து ஆடுவது எதிரணிக்கு சிக்கலை உருவாக்கும். நமக்கும் வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன் அவசியமானதாகும். அதற்கு பொருத்தமானவராக ரிஷப் பந்த் இருப்பார். அத்துடன் ரிஷப் பந்த் 1 முதல் 7 வரையிலான வரிசையில் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடியவர். விராட்கோலி மற்றும் அணி நிர்வாகம் ரிஷப் பந்தை எந்த நிலையிலும் தேவைக்கு தகுந்தபடி பயன்படுத்தி கொள்ள முடியும்.
ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக எளிதாக மெகா சிக்சர்களை அடிக்கக்கூடிய திறமை படைத்தவர் ரிஷப் பந்த். அவரது அச்சமில்லாத பேட்டிங் நெருக்கடியான நேரத்தில் அணிக்கு உதவும். இது போன்ற பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தேவையாகும். இந்திய அணியில் விராட்கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகிய 3 மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தமட்டில் 4-வது மேட்ச் வின்னர் ரிஷப் பந்த் தான்.
அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறந்த வீரர்கள் தான். ஆனாலும் அவர்கள் 3 பேரும் ஒரே மாதிரியாக விளையாடக்கூடியவர்கள். நமது அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் தேவை. அதற்கு ரிஷப் பந்த் தகுதியானவர். ரிஷப் பந்த் தொடக்க வீரர். தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். டோனி விக்கெட் கீப்பிங் செய்வதால், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரை சிறப்பு பேட்ஸ்மேன்களாக கருதி தேர்வு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #RishabhPant #Ashishnehra
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்