என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Offer"

    • பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.
    • 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். நிறுவன தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் "சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை" மற்றும் இண்ட்ராநெட் டெலிவிஷன் என்ற இரண்டு புதிய சேவையை பரிசோதனை அடிப்படையில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

    சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை ரோமிங் சேவையை பெற பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்கள் http:/portal.bsnl.in/ftth/wigiroming என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு தங்களின் வெளியூர் பயணங்களின் போது இணைய தளத்தில் இணைந்திருக்க முடியும்.

    இந்த சேவையை பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.

    இதற்கான டேட்டா தரவுகள் வாடிக்கையாளர்களின் தற்போதைய தேர்ந்து எடுக்கப்பட்ட திட்டத்தில் இருந்தே கழிக்கப்படும். வை-பை ரோமிங் சேவைக்கு தனியாக கட்டணம் கிடையாது.

    இண்ட்ராநெட் பைபர் டெலிவிஷன் சேவையை ஆண்ட்ராய்டு-10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் டி.வி.யில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.

    மேலும் ஒரு சலுகையாக இந்த மாதம் 24-ந்தேதி வரை ரூ.500 மற்றும் அதற்கு அதிகமாக ரீசார்ஜ் செய்யும் பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 24 நாட்கள் செல்லுபடியாகத்தக்க 24 ஜி.பி. டேடா கூடுதலாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டை ஐ.ஆர். சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்வோருக்கு புதிய வசதிகளை அந்த இணைய தளம் ஏற்படுத்தி உள்ளது. #IRCTC
    சென்னை:

    ரெயில் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் ரெயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு பஸ் பயணத்தை நாட வேண்டியதிருக்கிறது.

    தற்போது ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டை ஐ.ஆர். சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்வோருக்கு புதிய வசதிகளை அந்த இணைய தளம் ஏற்படுத்தி உள்ளது.

    காத்திருப்போர் பட்டிய லில் உள்ள ரெயில் டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? அல்லது ஆர்.ஏ.சி. நிலை வருமா? அல்லது டிக்கெட் கிடைக்காதா? என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லும் வசதி இந்த இணைய தளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதே போல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை வைத்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் புறப்படும் ரெயிலில் பயணம் செய்ய உறுதி செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் 24 மணி நேரத்திற்குள் விசே‌ஷ ரெயிலில் பயணம் செய்ய விருப்பமா? என்ற கேள்வி இணையதளத்தில் கேட்கப்படும். அதற்கு பதில் கொடுப்பதை பொறுத்து விசே‌ஷ ரெயில் இயக்கப்பட்டால் அதில் டிக்கெட் உறுதியாகிறது.



    டெல்லி-சென்னை இடையே 3-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இருந்தால் ஒரு ரெயிலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் இன்னொரு ரெயிலில் அதை உறுதி செய்து கொடுத்து விடுகிறார்கள்.

    அல்லது 3 ரெயில்களிலுமே காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்தால் ஒரு விசே‌ஷ ரெயிலை விட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள அந்த பயணிகளை அந்த விசே‌ஷ ரெயிலில் பயணம் செய்யும் முறையை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் ரெயில் பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    பயணிகளின் எண்ணிக்கையை கணித்து ரெயில்வேயின் வணிக பிரிவு புதிய ரெயில்களை இயக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார். #IRCTC
    ×