search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new shuttle"

    கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு மற்றும் ஷட்டரில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக மதகு அமைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய மதகு அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக மதகு அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது. இதனிடையே ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    இதில் முதல்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந்தேதி நிறைவு பெற்றது.

    இதையடுத்து புதிய மதகு மற்றும் ஷட்டரில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகளில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிக வேக காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் வெல்டிங் பணிகளில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இருப்பினும் கியாஸ் வெல்டிங் பணிகள் 4 முதல் 5 நாட்களில் முழுமையாக நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×