என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New toilets"
- டெல்லியில் பல இடங்களில் பூங்காக்களை அழகுபடுத்தவும், மரங்களை ஒளிரச் செய்யவும் முடிவு.
- சுற்றுலா தலங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மண்டலங்கள் முக்கியமானதாக தேர்வு.
இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி ஜி20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தனது ஐந்து மண்டலங்களில் புதிய கழிப்பறைகளை கட்டவும், பழைய கழிப்பறைகளை சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் பல இடங்களில் பூங்காக்களை அழகுபடுத்தவும், மரங்களை ஒளிரச் செய்யவும், பொது இடங்களில் கலைகள் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய சமுதாயக் கழிப்பறை வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளும், பழையவற்றை சரிசெய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த புதிய கழிப்பறைகள், மாநகராட்சியின் கரோல் பாக், தெற்கு, மத்திய, ஷாஹ்தாரா தெற்கு மற்றும் நகர எஸ்பி ஆகிய ஐந்து மண்டலங்களில் பணி மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா தலங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மண்டலங்கள் முக்கியமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.