என் மலர்
நீங்கள் தேடியது "NewYork"
- அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்தது.
- இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.
இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
- வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் டமாஸ்கஸ், திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.
நியூயார்க்:
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.


அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6 வயது மகள் மற்றும் அவளின் இரண்டு வயது தம்பி இருவரும் யோசிலின் ஆர்டிகா என்ற 55 பெண் பராமரிப்பின் கீழ் இருந்தனர்.
சம்பவம் நடந்த அன்று மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டு குளியலறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதை கண்ட அவர் அதிர்ர்சியில் உறைந்தார்.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்டிகாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற ஆர்டிகாவுக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது கிரீம் குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #YoselynOrtega