என் மலர்
நீங்கள் தேடியது "NJP"
- இது அரசியல் கட்சியின் நடவடிக்கை ஆகாது.
- சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
புதுடெல்லி :
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-
தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாகூர் (மத்திய மந்திரிகள்):-
சட்டம் எல்லோருக்கும் சமமானதுதான். ராகுல் காந்தி தனது திருடர்கள் என்ற கூற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவதூறாகப் பேசி உள்ளார்.
பவன் கெராவை அசாம் போலீஸ் கைது செய்தபோது, எடுத்தது போன்று ராகுல் காந்தி விவகாரத்தில் நிவாரணம் பெற மேல் கோர்ட்டை நாடவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இதில் சதி நடக்கிறது.
ராகுல் காந்தி மீதான நடவடிக்கை, இயல்பானதுதான். தண்டிக்கப்பட்ட நாளில் இருந்தே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இந்த சட்ட நடைமுறையை மக்களவை சபாநாயகர் உறுதி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.
எஸ்.பி.எஸ்.பாகல் (சட்டத்துறை ராஜாங்க மந்திரி):-
இது சட்டப்படியான நடவடிக்கை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
பிரகலாத் ஜோஷி (பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி):-
இது சட்டப்படியான நடவடிக்கை ஆகும். இது அரசியல் கட்சியின் நடவடிக்கை ஆகாது. இது கோர்ட்டால் எடுக்கப்பட்டது.
பூபேந்தர் யாதவ் (மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி):-
இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பதற்கு கோர்ட்டு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தது. ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டின் சட்டத்தை விட மேலானவர்களா?
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பின்பெயரை அவதூறாகப் பேசுவது ஒரு தேசியத்தலைவரின் வேலையா?
கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த 2-வது நாள் கூட்டத்தில், கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் அமளி ஏற்பட்டு சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.
அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி தர்ணா நடத்துகிறார்கள். தர்ணா நடத்துவதற்கு பதிலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா கொண்டுவர வேண்டும். எந்த நோக்கத்திற்காக அவர்கள் தர்ணா நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் நிதித்துறை மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அதன் பிரதியை உறுப்பினர்களுக்கு வழங்குவது இல்லை. பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே புத்தகம் வழங்கப்படுகிறது. அந்த நடைமுறையை தான் இப்போது நான் இங்கே பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #BJP
சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் அதன் தலைவர் எடியூரப்பா பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும். அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. அதனால் நமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரின் ஆசைகளுக்கு அடிபணிய வேண்டாம். உங்களுடன் கட்சி உள்ளது. உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இந்த கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கவிழ்ந்துவிடும் என்று தோன்றுகிறது.

நமது கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே ஒற்றுமை தொடர்ந்து இருக்க வேண்டும். இன்று (அதாவது நேற்று) எடுத்துள்ள முடிவில் இருந்து யாரும் பின்வாங்கக்கூடாது. இந்த கூட்டணி அரசில் நடந்து வரும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு சாதகமாக இருக்கிறது. சட்டசபை கூட்டத்தில் நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இது நமது கட்சி மேலிட தலைவர்களின் உத்தரவு ஆகும்.
கவர்னர் உரையின்போதே இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. குமாரசாமி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்களே சண்டை போட்டுக்கொண்டு ஆட்சியை இழப்பார்கள். நாம் பொறுமையாக அதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் எடியூரப்பா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Yeddyurappa #BJP